Redmi Note 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் - முழு விவரம் இங்கே..!

மற்ற நாடுகளில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

Redmi Note 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் - முழு விவரம் இங்கே..!

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஆக்டாகோர் பிராசசர் உள்ளது.

ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் உள்ளன.
  • 3 விதமான கலர் வேரியண்டுகளில் அறிமுகமாக உள்ளன
  • 5,020mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது.
விளம்பரம்

ரெட்மி நோட் 9 ப்ரோ, நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக அறிமுகமாகவுள்ள ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் குறித்த சில விவரங்கள் கசிந்துள்ளன.

இந்தியாவில் சியோமி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ரெட்மி 9 ஸ்மார்ட்போனுக்கான சீரிஸ் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமானது. ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், ரெட்மி 9, ரெட்மி நோட் 9 ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகவில்லை.

இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் குறித்து சில விவரங்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் இந்திய மாடலில் 3ஜிபி ரேம் இருக்காது என்று கூறப்படுகிறது. குளோபல் மாடலில் 3ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆனால், இந்திய பதிப்பில் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் அடிப்படை வேரியண்டாக 4ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் அறிமுகமாகிறது. மேலும், புதிதாக 6ஜிபி ரேம் கொண்டு வரப்படுகிறது. இந்த 6ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் மட்டும் தற்சமயம் அறிமுகம் செய்யப்படுகிறது.

விலை:

ரெட்மி நோட் 9 குளோபல் மாடல் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் 199 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,100) அறிமுகம் செய்யப்பட்டது. இதே போல், 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் 249 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.18,900) அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே மதிப்பில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Powerful processor
  • Decent daylight camera performance
  • Bad
  • Average low-light camera performance
  • Bloated UI and spammy notifications
Display 6.53-inch
Processor MediaTek Helio G85
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »