இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதே சமயம் அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 12,999 விலைக் குறியைக் கொண்டுள்ளது.
Redmi Note 8, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஐக் கொண்டுள்ளது
இந்தியாவில் Redmi Note 8 டிசம்பர் 10-ஆம் தேதி மீண்டும் வாங்குவதற்க்உ கிடைக்கும். பட்ஜெட் ரெட்மி போன்கள் Amazon, Mi.com மற்றும் Mi Home stores மூலம் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். ஜியோமி, Redmi Note 8-ஐ Redmi Note 8 Pro-வுடன் அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் Redmi Note 8-ன் விலை, சலுகை விவரங்கள்
இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதே சமயம் அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 12,999 விலைக் குறியைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் Moonlight White, Neptune Blue, Space Black மற்றும் Cosmic Purple வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும், Amazon, Mi.com மற்றும் Mi Home stores வழியாக டிசம்பர் 10-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மூன்று மாதங்களில் உலகளவில் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro-வின் 10 மில்லியன் யூனிட்டுகளை விற்றதாக ஜியோமி சமீபத்தில் கூறியது. அறிமுகமான ஒரு மாதத்தில் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான Redmi Note 8 சீரிஸ் யூனிட்டுகளை விற்றதாக நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது.
Redmi Note 8-ன் சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 MIUI 10 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 19.5:9 aspect ratio மற்றும் 2.5D curved glass protection உடன் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. குவாட் ரியர் கேமரா அமைப்புடன் Redmi Note 8-ல், 8-megapixel wide-angle shooter, 2-megapixel depth sensor மற்றும் 2-megapixel macro snapper உடன் 48-megapixel முதன்மை சென்சாரைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 13-megapixel செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
Redmi Note 8-ல் 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை ஜியோமி வழங்கியுள்ளது. இவை இரண்டும் microSD card வழியாக (512GB வரை) பிரத்யேக் ஸ்லாட் மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கின்றன. இந்த போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. Redmi Note 8, 18W fast சார்ஜின் ஆதரவோடு, 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. தவிர, இந்த போன் 158.3x75.30x8.35mm அளவீடையும், 188 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale