Redmi Note 8 Pro vs Realme XT.. எதை வாங்கலாம்...? இரண்டில் எது பெஸ்ட்..!

Redmi Note 8 Pro vs Realme XT.. எதை வாங்கலாம்...? இரண்டில் எது பெஸ்ட்..!

Xiaomi Redmi Note 8 Pro vs Realme XT : இதில் சிறந்த கேமிங் ஃபோன் எது? எதில் சிறந்த கேமராக்கள் உள்ளது?

ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro Realme XT-யை விட சக்தி வாய்ந்தது.
  • Realme XT பெரும்பாலான நிலைமைகளில் சிறந்த புகைப்படங்களை எடுக்கிறது.
  • Realme XT, ரெட்மி Note 8 Pro-வை விட சிறந்த பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது
விளம்பரம்

கடந்த ஆண்டில் பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்கள் கடுமையாக முன்னேற்றம் அடைந்துள்ளது. கேமரா, பேட்டரி, சக்திவாய்ந்த processor என அனைத்து அம்சங்களும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக Xiaomi மற்றும் Realme ஸ்மார்ட் ஃபோன்கள் சில மாதங்களாக தீவிரமாக போட்டியிட்டு வருகிறது. இதன் விளைவாக வாடிக்கையாளர்கள் வெகுவாக பயனடைந்துள்ளனர். இந்நிலையில், இரு நிறுவனங்களும் புதிய ஸ்மார்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  Xiaomi தரப்பில் Redmi Note 8 Pro-வையும், அதற்கு ஈடு கொடுக்க Realme தரப்பில் Realme XT என்ற மாடலும் வெளியாகியுள்ளது. இப்போது இந்த இரண்டு ஃபோன்களில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

Redmi Note 8 Pro vs Realme XT வடிவமைப்பு (design)

Realme XT (Review) மற்றும் Redmi Note 8 Pro (Review) இரண்டிலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இருபுறமும் பொருத்தப்பட்டுள்ளது. இது பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் கொடுக்கிறது. Redmi Note 8 Pro-வின் திரை 6.53 அங்குலமும், Realme XT-யில்  6.4 அங்குல திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டும் dewdrop notch செல்ஃபி கேமராக்களைக் கொண்டுள்ளன.

Redmi Note 8 Pro-வில் உள்ள கைரேகை ஸ்கேனரும் பின்புறத்தில் சற்று தொலைவில் உள்ளது, ஆனால், Realme XT டிஸ்ப்ளே (in-display) கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இருப்பினும், பயன்படுத்தியதில் இரண்டுமே சமமாக விரைவாக வேலை செய்கிறது. Redmi Note 8 Pro மற்றும் Realme XT இரண்டும் அர்ப்பணிக்கப்பட்ட மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டுகளுடன் இரட்டை நானோ-சிம் ஸ்லாட்டுகளுடன் இருப்பது நன்றாக உள்ளது.

Realme XT Redmi Note 8 Pro Display Realme XT vs Redmi Note 8 Pro ComparisonRealme XT has an AMOLED display which is better than the Redmi Note 8 Pro

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் முதன்மை மைக்ரோஃபோன்கள், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுடன் USB Type-C போர்ட்களை கீழே கொண்டுள்ளன. Redmi Note 8 Pro-வின் மேற்பகுதியில் IR emitter உள்ளது, ஆனால் Realme XT-யில் இது இல்லை.

200 கிராம் எடை கொண்ட Redmi Note 8 Pro-வுடன் ஒப்பிடும்போது  Realme XT 183 கிராம் எடையில் இலகுவாக அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக Note 8 Pro-வில் பெரிய 4,500 mAh பேட்டரி கொடக்கப்பட்டதனால் இருக்கலாம், அதே சமயம் Realme XT-யில் 4,000 எம்ஏஎச் பேட்டரி பேக் மட்டுமே உள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, Realme XT இரண்டின் மிகவும் சக்திவாய்ந்த சார்ஜரான VOOC 20W ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது, Redmi Note 8 Pro 18W சார்ஜருடன் வருகிறது.

Redmi Note 8 Pro vs Realme XT specifications and software

ரியல்மி Qualcomm Snapdragon 712 SoC-ஐ கொண்டுள்ளது, அதே சமயம் Note 8 Pro மிகச் சமீபத்திய MediaTek Helio G90T SoC ப்ராசெஸ்ஸர் கொண்டுள்ளது. இரு ஃபோனிலும் உள்ள வேரியண்டுகள் மற்றும் அதன் விலையைப் பார்ப்போம்.

Realme XT-யில் மூன்று வேரியண்டுகள் உள்ளன. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 15.999, 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்ட வேரியண்ட் 16,999 ரூபாய்க்கும், டாப் வேரியண்டாக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் 18,999 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Redmi Note 8 Pro-வில் பேசிக் வேரியண்டாக, 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜுடன் ரூ. 14.999-க்கும், நடுத்தர வேரியண்ட்டில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் ரூ. 15,999-க்கும், டாப்-எண்ட் வேரியண்டில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் ரூ. 17.999-க்கும் விற்கப்படுகிறது.

Realme XT Redmi Note 8 Pro Back Realme XT vs Redmi Note 8 Pro ComparisonBoth smartphones feel premium in the hand

இரண்டு ஸ்மார்ட்போன்களும் யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றன மற்றும் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுகள் கொண்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் full-HD+ ரெசொலூஷன்  கொண்டுள்ளன.

மென்பொருளைப் பொறுத்தவரை வேறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளது. Redmi Note 8  Android 9 Pie-யின்  மேல் MIUI 10 OS-உடன் இயங்கும். இது எரிச்சலூட்டும் விளம்பரங்கள் நிறைய அனுமதிக்கிறது என்றாலும், பல பயனுள்ள வசதிகளை வழங்குகிறது. Realme XT ColorOS-ல் இயங்குகிறது. எந்த UI உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை தீர்மானிக்க இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் முழு ஒப்பீட்டையும் தெரிந்துகொள்ளுங்கள். MIUI-ஐ விட Realme-யின்  ColorOS அதிக விருப்பமாக உள்ளது, ஏனெனில் இதில்  spam அதிகமாக இல்லை.

Redmi Note 8 Pro Review

Redmi Note 8 Pro vs Realme XT performance and battery life

செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுள்

செயல்திறன் நிச்சயமாக மிகவும் முக்கியமானது. ரெட்மி ஸ்மார்ட்போனை இயக்கும் புதியMediaTek Helio G90T SoC ஒப்பீட்டளவில் பழைய Snapdragon 712 SoC-ஐ விட சிறப்பாக செயல்படுகிறது, மேலும், கேமிங் உங்களுக்கு முக்கியம் என்றால் இது ஒரு நல்ல தேர்வாகும்.

இந்த ஸ்மார்ட்போன்களில் வீடியோக்களைப் பார்க்கும்போது, Realme XT-யின் டிஸ்ப்ளே நன்றாக இருந்தது, இதற்கு AMOLED பேனலைப் பயன்படுத்தியதே காரணம்.

Realme XT Review

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் செயல்திறனை பார்க்கையில், அவற்றைப் பயன்படுத்தும் போது எந்தவிதமான பின்னடைவையும் தடுமாற்றமும் காணப்படவில்லை. மெனுக்கள் வழியாக செல்லவும் பயன்பாடுகளுக்கு இடையில், multitasking செய்யவும் போதுமான செயல்திறனை கொண்டுள்ளன.

இருப்பினும், Redmi Note 8 Pro புதிய மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மூலம் பெரும்பாலான சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டது.

Realme XT Redmi Note 8 Pro Camera Realme XT vs Redmi Note 8 Pro ComparisonQuad-camera setups have identical resolutions on the Redmi Note 8 Pro and the Realme XT

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கேமிங்கை எவ்வாறு கையாள முடியும் என்பதைப் பார்க்க நாங்கள் PUBG mobile-ஐ விளையாடியபோது. Realme XT மற்றும் Redmi Note 8 Pro இரண்டுமே எந்த சிக்கலும் இல்லாமல் விளையாட முடிந்தது, எந்த தடுமாற்றத்தையும் கவனிக்கவில்லை. ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் சுமார் 30 நிமிடங்கள் ஒரு போட்டியில் விளையாடியுள்ளோம், ரெட்மி நோட் 8 ப்ரோ இறுதியில் ரியல்மே எக்ஸ்டியை விட வெப்பமானது, மேலும் Realme-யில் 5 சதவிகித பேட்டரி இருந்த போது,  Redmi-யில் 11 சதவிகித சார்ஜ் இருந்தது.

HD video loop சோதனையில், Realme XT 20 மணிநேரம், 36 நிமிடங்கள் தாக்குப்பிடித்து மிகப்பெரிய முன்னிலை பெற்றது, அதே நேரத்தில் Redmi Note 8 Pro 14 மணிநேரம் தாக்குப்பிடித்தது. மேலும், Realme XT-யின் சக்திவாய்ந்த சார்ஜர் அரை மணி நேரத்தில் 46 சதவிகிதம் வரை சார்ஜ் செய்தது, அதே நேரத்தில் Redmi Note 8 Pro 32 சதவிகிதம் வரை சார்ஜ் செய்தது.

எனவே, Redmi Note 8 Pro மிகவும் சக்திவாய்ந்த சாதனமாக இருந்தாலும், Realme XT சார்ஜரிலிருந்து அதிக நேரம் நீடித்து இருக்கும்.

Redmi Note 8 Pro vs Realme XT cameras

இரண்டு ஸ்மார்ட்போன்களும் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அகல-கோண (wide angle) கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ (macro) கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் depth sensor ஆகியவற்றைக் கொண்ட பின்புற குவாட்-கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், Realme XT-யில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் , Redmi Note 8 Pro-வில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் உள்ள கேமரா பயன்பாடுகள் பயன்படுத்த எளிதானது, ஆனால் Redmi Note 8 Pro-வில் உள்ளவை மிகவும் மெருகூட்டப்பட்டவை, மேலும் இது user-friendly-ஆக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான சூழ்நிலையில் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க ஒரே நேரத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. இரண்டு மாடல்களும் விரைவாக focus செய்கின்றன. பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் Realme XT-யில் மிகவும் துல்லியமான வண்ணங்கள் மற்றும் ஓரளவு சிறந்த விவரங்களுடன் சிறப்பாக இருந்தன. இந்த ஃபோன் ஒளியை சற்று சிறப்பாக மீட்டெடுத்தது, இது பிரேம்களை மிகவும் இயற்கையாக வெளிப்படுத்த உதவுகிறது.

Daylight shots (Tap to see full-size samples)

பிரகாசமான காட்சிகளில், இரண்டு தொலைபேசிகளும்  HDR-ஐ தானாக இயக்கும். Redmi Note 8 Pro-வில் வைட்-ஆங்கிள் கேமராக்களுடன் எடுக்கப்பட்ட ஷாட்கள் சிறப்பாக இருந்தன, ஏனெனில் Realme XT சிறிது நீல வண்ண டோனை உருவாக்கியது மற்றும் அதிகப்படியான வெளிச்சத்தைக் காட்டியது.

Shots with HDR on (Tap to see full-size sample)

Wide-angle shots (Tap to see full-size samples)

குறைந்த வெளிச்சத்தில், இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள AI-கள் தானாகவே இரவு காட்சிகளை சிறப்பாகப் படம் பிடிக்கிறது. Realme XT பிரகாசமான காட்சிகளை வழங்கியது. இரண்டு தொலைபேசிகளிலும் நைட் மோடைப் பயன்படுத்தும் போது, ​​Realme XT இன்னும் சிறந்த முடிவுகளை வழங்கியது.

Low-light sample (Tap to see full-size sample)

Shot with Night Mode (Tap to see full-size sample)

Close-up படமெடுக்கும் போது, ​​இரண்டு ஸ்மார்ட்போன்களும் விரைவாக focus-ஐ லாக் செய்தது. ஆனால், Realme XT மிகவும் துல்லியமான வண்ணங்களைக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் Redmi Note 8 Pro சற்று விலகி இருந்தது. இருப்பினும், குறைந்த வெளிச்சத்தில் க்ளோசப்ஸை எடுக்கும்போது, ​​Redmi Note 8 Pro அதன் வண்ணத்தை பெருக்கி, விவரங்களுடன் Realme XT-யை விஞ்சியது.

Daylight Closeup shots (Tap to see full-size samples)

Low-light Closeups (Tap to see full-size sample)

Portrait shots எடுக்கும்போது Redmi மங்கலாக காணப்பட்டது, ஆனால் Realme XT-யில் அப்படி இல்லை. இரண்டு தொலைபேசிகளும் அவற்றின் பின்னணியிலிருந்து சப்ஜெக்டை நன்கு பிரித்து நல்ல விவரங்களைக் கைப்பற்றின, ஆனால் Realme XT முகங்களுக்கு beautification filter பயன்படுத்துவதாக தெரிகிறது. Redmi Note 8 Pro பின்னணியை (background) சற்று அதிகமாக வெளிப்படுத்த முனைந்தது, இது Realme XT-க்கு பொருந்தாது. குறைந்த வெளிச்சத்தில் படம்பிடிக்கப்பட்ட Portrait-கள் ரெட்மி நோட் 8 ப்ரோவில் சிறப்பாக இருந்தன.

Portrait shots (Tap to see full-size samples)

இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள மேக்ரோ கேமராக்களையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நிழல்களை தடுக்க மேக்ரோ ஷாட் எடுக்கும்போது இரு ஃபோனிலும் எல்.ஈ.டி ஃபிளாஷ் பயன்படுத்தலாம். பகல் நேரத்தில், எல்.ஈ.டி ஃபிளாஷுடனும், இல்லாமலும் Realme XT நன்றாக படம் பிடித்தது. ஆனால்,குறைந்த வெளிச்சத்தில், ரெட்மி நோட் 8 ப்ரோ ரியல்மே எக்ஸ்டியை விட சிறந்த மேக்ரோ ஷாட்டை எடுத்தது.

Macro Shots (Tap to see full-size samples)

Lowlight Macro Shots (Tap to see full-size samples)

இரண்டு தொலைபேசிகளிலும் எடுக்கப்பட்ட செல்ஃபிக்களிலும் நல்ல விவரங்கள் இருந்தன, ஆனால் ரெட்மி நோட் 8 ப்ரோவில் எடுத்த புகைப்படம் சற்று விறும்பக்கூடியதாக இருந்தது.

Daylight Selfies (Tap to see full-size samples)

Low-light Selfies (Tap to see full-size samples)

வீடியோ ரெக்கார்டிங்கை பொருத்தவரை இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் 4K 30fps-ல் பதிவுசெய்யும் திறன் கொண்டுள்ளது, மேலும் இவை இரண்டும் 1080p 60fps மற்றும் 1080p 30fps-ல் காட்சிகளைப் பதிவுசெய்யும் திறன் கொண்டவை. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் EIS உள்ளது. ரெட்மி நோட் 8 ப்ரோவில் வீடியோ ஷாட் கூர்மையை மிகவும் அதிகப்படுத்திக் காட்டியது, அதே சமயம் ரியல்மே எக்ஸ்டி மிகவும் இயற்கையான தோற்றத்தை அளித்தது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build
  • Good set of cameras
  • Strong overall performance
  • Good battery life, quick charging
  • Bad
  • Camera app lacks some basic features
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme XT, Redmi Note 8 Pro, Redmi Note 8 Pro vs Realme XT
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »