Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro-வின் விற்பனை அக்டோபர் 25, மதியம் 12 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது
Redmi Note 8-ன் ஆரம்ப விலை 9,999 ரூபாய்க்கு, மூன்று நிறங்களில் வருகிறது
Redmi Note 8 Pro மற்றும் Redmi Note 8 இரண்டும் அக்டோபர் 25 ஆம் தேதி மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளன. quad rear கேமரா மற்றும் full-HD+ panels ஆகிய அம்சத்தைக் ஜியோமி போன்கள் பேக் செய்கிறது.
இந்தியாவில் Redmi Note 8 Pro மற்றும் Redmi Note 8-ன் விலை:
Redmi Note 8 Pro, 6GB + 64GB ஸ்டோரேஜின் ஆரம்ப விலை ரூ.14,999-யாக உள்ளது. அதேபோல் 6GB + 128GB ஸ்டோரேஜின் ஆரம்ப விலை ரூ. 15,999-யாக உள்ளது. இந்தியாவில், top-end 8GB + 128GB மாடல் ரூ. 17,999 என விலைக்குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Gamma Green, Halo White மற்றும் Shadow Black நிறங்களில் கிடைக்கிறது.
Redmi Note 8, 4GB + 64GB ஸ்டோரேஜின் ஆரம்ப விலை 9,999-ரூபாயாக உள்ளது. அதேபோல் high-end 6GB + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 12,999-யாக உள்ளது. இந்த போனை Moonlight White, Neptune Blue மற்றும் Space Black நிறங்களில் வாங்கலாம். Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro, Amazon.in, Mi. com மற்றும் Mi Home stores வழியாக அக்டோபர் 25, மதியம் 12 மணிக்கு நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்.
இரண்டு சியோமி தொலைபேசிகளும் விற்பனை சலுகைகளில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 249 மற்றும் ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் 10 மாத காலத்திற்கு டபுள் டேட்டா நன்மைகளும் அடங்கும். மேலும், ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான 10 சதவீத உடனடி தள்ளுபடியும் உள்ளது.
Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்
Redmi Note 8 Pro இரட்டை சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது. 6.53-inch full-HD+ (1080x2340 pixels) screen-ஐ கொண்டுள்ளது. மேலும் MediaTek's புதிய gaming-focussed செய்யப்பட்ட MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் வரை பேர் செய்யப்பட்டுள்ளது. Redmi Note 8 Pro பயனர்களுக்கான கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் (liquid cooling) ஆதரவையும் ஜியோமி சேர்த்துள்ளது. தொலைபேசியில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும்.
64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட Redmi Note 8 Pro, நிறுவனத்தின் முதல் போன் ஆகும். இதில் 8 மெகாபிக்சல் wide-angle shooter மற்றும் two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 18W fast charging, NFC, USB Type-C port, 3.5mm audio jack மற்றும் IR blaster ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் IP52 சான்றிதழ் பெற்றது.
Redmi Note 8-ன் சிறப்பம்சங்கள்:
Redmi Note 8, MIUI 10 உடன் Android Pie-யால் இயங்குகிறது. Redmi Note 7-வில் இருந்தது போன்றே 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. 6GB RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 processor-ஆல் இயக்கப்படுகிறது.
Redmi Note 8-ல் 48-megapixel முதன்மை கேமராவும், depth-sensing மற்றும் மேக்ரோ புகைப்படங்களை எடுக்க 8-megapixel wide-angle snapper மற்றும் ஒரு ஜோடி 2-megapixel சென்சாரும் உதவுகிறது. microSD card slot வழியாக 512GB வரை விரிவாக்கக்கூடிய 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. 18W fast charging ஆதரவுடன் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Xiaomi 18 Worldwide Debut Inches Closer Following First Major Regulatory Move
Google May Soon Give Android Users More Control Over Advanced Protection Features; Suggests APK Teardown