இந்தியாவில் Redmi Note 8 Pro-வின் விலை ரூ.14,999-ல் தொடங்குகிறது
Redmi Note 8 Pro, 128GB வரை ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. ஆனால், பிரத்யேக microSD card slot இல்லை
இந்தியாவில் Redmi Note 8 Pro இன்று மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. Redmi Note 8 Pro-வின் விற்பனை மதியம் 12 மணிக்கு, Amazon, Mi.com மற்றும் Mi Home stores வழியாக சில சலுகைகளுடன் நடத்தப்படும்.
இந்தியாவில் Redmi Note 8 Pro-வின் விலை மற்றும் சலுகைகள்:
Redmi Note 8 Pro அடிப்படை 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 14,999-ல் தொடங்குகிறது. அதே நேரத்தில் போனின் 6GB RAM + 128GB மாடலை ரூ. 15,999-க்கு வாங்கலாம். top-of-the-line 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 17,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. Gamma Green, Halo White மற்றும் Shadow Black ஆகிய நிறங்களில் Redmi Note 8 Pro கிடைக்கிறது.
Redmi Note 8 Pro-வின் விற்பனை நாடு முழுவதும் Amazon, Mi.com மற்றும் Mi Home Stores வழியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும். ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கியவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி, ரூ. 249 மற்றும் ரூ. 349 ப்ரீபெய்டு திட்டங்களில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை டேட்டா பலன்கள் மற்றும் no-cost EMI திட்டங்கள் Redmi Note 8 Pro-வின் விற்பனை சலுகைகளில் உள்ளன.
Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்:
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Redmi Note 8 Pro, MIUI 10 skin உடன் Android Pie-யால் இயங்குகிறது. மேலும், 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. 8GB RAM வரை octa-core MediaTek Helio G90T processor மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது.
இந்த போனில், 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens ஆகியவற்றின் உதவியோடு, குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.89 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் உள்ளது. முன்பக்கத்தில், f/2.0 lens உடன் 20-megapixel கேமரா உள்ளது. Redmi Note 8 Pro-வில் 128GB ஆன்போர்டு UFS 2.1 ஸ்டோரேஜ் உள்ளது. ஆனால், ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக microSD card slot இதில் இல்லை.
Xiaomi போனின் இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். Redmi Note 8 Pro-வில் 18W fast சார்ஜிங்கை ஆதரவுடன், 4,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Tab S10 Lite
Starts from ₹33,499
JBL New Live 780NC Wireless Headphones
Starts from ₹15,999
OnePlus N6
Starts from ₹22,520
Motorola Edge 60 Fusion
Starts from ₹20,900
HP 303D Laser Single Function Monochrome Printer
Starts from ₹13,999
HP MFP 323DNW Laser Multi Function Monochrome Printer
Starts from ₹21,999