64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட Redmi Note 8 Pro, நிறுவனத்தின் முதல் போன் ஆகும்.
64-megapixel முதன்மை கேமராவுடன் வருகிறது Redmi Note 8 Pro
Redmi Note 8 Pro இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த போன், Helio G90T SoC, quad camera அமைப்புடன் 64-megapixel முதன்மை சென்சார், 4,500mAh பேட்டரி மற்றும் 20-megapixel front சென்சார் ஆகிய அம்சங்களுடன் ஏற்கனவே சீனாவில் அறிமுகமானது.
Redmi Note 8 Pro-வின் லைவ் ஸ்ட்ரீமிங் விவரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை:
Redmi Note 8 Proவெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி (நண்பகல்) மதியம் 12 மணிக்குத் தொடங்கும். மேலும் இது யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும். நிகழ்வில் தொலைபேசியின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிக்கப்படும். குறிப்பிட்டுள்ளபடி, Amazon India மற்றும் Mi.com இரண்டிலும் இந்த தொலைபேசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள வீடியோவில் லைவ் ஸ்ட்ரீமைப் பார்க்கலாம்:
விலையைப் பொறுத்தவரை, Redmi Note 8 Pro சீனாவின் விலை வரம்பிற்கு அருகில் இருக்க வேண்டும். Redmi Note 8 Pro அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் CNY 1,399 (தோராயமாக ரூ. 14,000)-யில் இருந்து தொடங்கும். 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல்களின் விலை முறையே CNY 1,599 (தோராயமாக ரூ. 16,000) மற்றும் CNY 1,799 (தோராயமாக ரூ .18,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்
Redmi Note 8 Pro இரட்டை சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது. 6.53-inch full-HD+ (1080x2340 pixels) screen-ஐ கொண்டுள்ளது. மேலும் MediaTek's புதிய gaming-focussed செய்யப்பட்ட MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் வரை பேர் செய்யப்பட்டுள்ளது. Redmi Note 8 Pro பயனர்களுக்கான கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் (liquid cooling) ஆதரவையும் ஜியோமி சேர்த்துள்ளது. தொலைபேசியில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும்.
64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட Redmi Note 8 Pro, நிறுவனத்தின் முதல் போன் ஆகும். இதில் 8 மெகாபிக்சல் wide-angle shooter மற்றும் two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 18W fast charging, NFC, USB Type-C port, 3.5mm audio jack மற்றும் IR blaster ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் IP52 சான்றிதழ் பெற்றது.
MIUI 11 Global ROM - அறிமுகம்:
MIUI 11 கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு நிறுவனம் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட அம்சங்களில் dynamic font scaling, customisable lock screen, a new reminder feature மற்றும் dynamic sound effects ஆகியவை அடங்கும். இது Mi Work மற்றும் Mi Go போன்ற புதிய பயன்பாடுகளைக் கொண்டுவருகிறது. பயனர்கள் தொடர்ச்சியாக ஐந்து முறை power button-ஐ அழுத்துவதன் மூலம் emergency mode-ஐ இயக்க அனுமதிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999