Redmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்!

புதிய Redmi Note 8, Electric Light Grey, Ice Emerald மற்றும் Pearl White ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Redmi Note 8 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகம்!

Photo Credit: Weibo

Redmi Note 8 Pro, 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது - இந்தியாவில் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை

ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro 256GB ஆப்ஷன் Mi.com-ல் விற்பனைக்கு உள்ளது
  • சீனாவில் புதிய top-end வேரியண்டின் விலை CNY 1,899 ஆகும்
  • Redmi Note 8 Pro, Helio G909T processor மூலம் இயக்கப்படுகிறது
விளம்பரம்

Redmi Note 8 Pro சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அது பல ரேம் + சேமிப்பக உள்ளமைவுகளில் கிடைத்தது. இருப்பினும், கலவையில் மேலும் ஒரு ரேம் + சேமிப்பக உள்ளமைவு சேர்க்கப்பட்டுள்ளது. top end 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதன் விலை CNY 1,899-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது Redmi Note 8 Pro World of Warcraft வேரியண்டைப் போன்றது. மேலும் இந்த வேரியண்ட் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வருகிறது. எப்போது இந்தியாவுக்கு வரும் என்று எந்த தகவலும் இல்லை.


Redmi Note 8 Pro-வின் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை:

Redmi Note 8 Pro 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜியோமி, வெய்போவில் அறிவித்துள்ளது. இந்த வேரியண்டின் விலை CNY 1,899 (சுமார் ரூ. 19,000). இது ஏற்கனவே Mi.com-ல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய வேரியண்ட் Electric Light Grey, Ice Emerald மற்றும் Pearl White ஆகிய மூன்று வண்ண விருப்பங்களிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரை, இந்த வேரியண்ட் இந்தியாவுக்கு எப்போது வரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும், கருத்து தெரிவிக்க நாங்கள் ஜியோமியை அணுகியுள்ளோம்.

நினைவுகூர, Redmi Note 8 Pro கடந்த மாதம் இந்தியாவில் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது - 6GB + 64GB-யின் விலை ரூ. 14,999, 6GB+128GB-யின் விலை ரூ. 15,999 மற்றும் 8GB+128GB-யின் விலை ரூ. 17,999. மலிவான விருப்பங்களைப் பார்க்கிறீர்கள் என்றால், Redmi Note 8 Pro-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை CNY 1,399 (சுமார் ரூ. 14,000) விலையில் கிடைக்கிறது. 6GB + 128GB மற்றும் 8GB + 128GB மாடல்களின் விலை முறையே CNY 1,599 (சுமார் ரூ. 16,000) மற்றும் CNY 1,799 (சுமார் ரூ .18,000)-யாக உள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்ட World of Warcraft வேரியண்டின் விலை CNY 1,899 (சுமார் ரூ .19,000)-யாக உள்ளது.


Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்:

Redmi Note 8 Pro, டூயல்-சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது. இந்த போன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) திரையைக் கொண்டுள்ளது. மேலும், 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, MediaTek's new gaming-focussed Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது. Redmi Note 8 Pro பயனர்களுக்காக கேமிங் அனுபவத்தை மேம்படுத்த, ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் ஆதரவையும் ஜியோமி சேர்த்தது. போனில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும். நிறுவனம் தொலைபேசியில் ஒரு விளையாட்டு கட்டுப்படுத்தியை விற்பனை செய்யும். இது 256GB வரை இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.

புரோ வேரியண்ட் 64-megapixel பிரதான கேமரா கொண்ட நிறுவனத்தின் முதல் போன் ஆகும். Redmi Note 8 - 8-megapixel wide-angle shooter மற்றும் இரண்டு 2-megapixel கேமராக்கள் போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20-megapixel செல்பி கேமரா போர்டில் உள்ளது. இது 18W fast charging, NFC, USB Type-C port, 3.5mm audio jack, IR blaster ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் IP52 சான்றிதழ் பெற்றது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »