இந்தியாவில் Redmi Note 8 4GB + 64GB வேரியண்டில் மட்டுமே இந்த விலை உயர்வு பொருந்தும்.
விநியோக சங்கிலி சீர்குலைவு, கூறுகளின் விலை உயர காரணமாக அமைந்துள்ளது என்று ஜியோமி கூறுகிறது
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கத்தால், விநியோகத்தில் பாதிக்கப்பட்டுள்ள சமீபத்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஜியோமி ஆகும். இந்தியாவில் Redmi Note 8 விலையை ரூ.500-ஆக உயர்த்தியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. விலை உயர்வு தற்காலிகமானது என்று ஜியோமி கூறுகிறது. கூறுகளின் விலை உறுதிப்படுத்தப்பட்டவுடன் Redmi Note 8 அதன் அசல் விலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. மேலும், Redmi Note 8 தற்போது அமேசானில் கையிருப்பில் இல்லை, ஆனால் அது விரைவில் திரும்பும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Redmi Note 8 4GB + 64GB மாடலுக்கு மட்டுமே விலை உயர்வு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த போன் ரூ.9,999-க்கு விற்கப்பட்டது. விலை உயர்வைத் தொடர்ந்து, இப்போது ரூ.10,499-க்கு கிடைக்கிறது.
"சீனாவில் நீட்டிக்கப்பட்ட பணிநிறுத்தம் எங்கள் விநியோகச் சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் கூறுகளின் ஒட்டுமொத்த அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கூறுகள் மற்றும் மூலப்பொருட்களுக்கான மாற்று விநியோக சேனல்களை ஆராய்வதற்கு நாங்கள் பணிபுரியும் போது, உடனடி தாக்கம் என்னவென்றால், குறுகிய வழங்கல் இந்த கூறுகளின் விலைகளில் சில எதிர்மறை அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இது தற்காலிகமாக உற்பத்தியின் விலை அதிகரிக்க வழிவகுத்தது, ”என்று Xiaomi செய்தித் தொடர்பாளர் கேஜெட்ஸ் 360 இடம் கூறினார், விலை உயர்வுக்கு பின்னால் உள்ள காரணத்தை விளக்கினார்.
விலை அதிகரிப்பு Mi.com மற்றும் அமேசானில் தெரியும். இருப்பினும், இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் Redmi Note 8 அமேசானில் ‘அவுட் ஆஃப் ஸ்டாக்' (out of stock) என பட்டியலிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் மீண்டும் கையிருப்பில் இருக்கும் என்று ஜியோமி கேஜெட்ஸ் 360-க்கு தெரிவித்துள்ளது. அமேசானைப் பொறுத்தவரை, Redmi Note 8 4GB + 6GB வேரியண்ட் பிப்ரவரி 18-ஆம் தேதி வாங்குபவர்களுக்கு மீண்டும் கையிருப்பில் இருக்கும் என்று தயாரிப்பு பக்கம் (product page) கூறுகிறது.
Is Realme C3 price likely to usher in a budget smartphone revolution? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo Y31d Launched With Snapdragon 6s 4G Gen 2 Chipset and 7,200mAh Battery
Samsung Galaxy S26 Ultra Tipped to Cost Less Than Predecessor; Galaxy S26, Galaxy S26+ Price Hike Unlikely