தனது ஸ்மார்ட்போன் எண்ணிக்கை வரிசையில் மற்றொரு எண்ணை கூட்டியுள்ள ரெட்மீ நிறுவனம், கடந்த திங்கட்கிழமை அன்று "ரெட்மீ நோட் 7S"-ஐ அறிமுகம் செய்தது.
நாளை விற்பனைக்கு வரவுள்ள ரெட்மீ நோட் 7S
தனது ஸ்மார்ட்போன் எண்ணிக்கை வரிசையில் மற்றொரு எண்ணை கூட்டியுள்ள ரெட்மீ நிறுவனம், கடந்த திங்கட்கிழமை அன்று "ரெட்மீ நோட் 7S"-ஐ அறிமுகம் செய்தது. இந்த அறிமுகத்தின் மூலம் தற்போது, நோட் 7 வரிசையில் மூன்று போன்கள் நிற்கின்றன - ரெட்மீ நோட் 7, ரெட்மீ நோட் 7 Pro மற்றும் ரெட்மீ நோட் 7S. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும், தங்கள் அமைப்பில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு, மூன்று விதமான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, வேறுபட்ட விலையில் உள்ளன. ரெட்மீ நோட் 7S-க்கு முன்னதாக, ரெட்மீ நோட் 7 மற்றும் ரெட்மீ நோட் 7 Pro ஆகிய இரு ஸ்மார்ட்போன்களையும் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் ரெட்மீ நிறுவனம் அறிமுகம் செய்தது.
இரண்டு வகைகளில் வெளியாகவுள்ள 'ரெட்மீ நோட் 7S'-னின், 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட வகை 10,999 ரூபாய் விலையிலும் மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் விலையிலும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Onyx Black), நீலம் (Sapphire Blue) மற்றும் சிவப்பு (Ruby Red) என்ற மூன்ற வண்ணங்களை கொண்டு வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், மே 23 அன்று ஃப்ளிப்கார்ட் மற்றும் எம் ஐ தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
நோட் 7 தொடரில் பிரீமியம் போன் என கருத்தப்படும் 'ரெட்மீ நோட் 7 Pro'-வின் விலை, இந்தியாவில் 13,999 ரூபாய்க்கு துவங்குகிறது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7 Pro' 13,999 ரூபாய் என்ற விலையிலும் மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 16,999 ரூபாய் விலையிலும் விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Neptune Blue), சிவப்பு (Nebula Red), மற்றும் கருப்பு (Space Black) என மூன்ற வண்ணங்களில் வெளியானது.
இறுதியாக, நோட் 7 தொடரில் மற்றொரு போனான 'ரெட்மீ நோட் 7 ', இந்தியாவில் 9,999 ரூபாய் என்ற விலையிலிருந்தே துவங்குகிறது. 3GB + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரெட்மீ நோட் 7' 9,999 ரூபாய் என்ற விலையிலும் மற்றும் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் விலையிலும் விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Onyx Black), நீலம் (Sapphire Blue) மற்றும் சிவப்பு (Ruby Red) என மூன்ற வண்ணங்களில் வெளியானது.
![]()
மூன்று ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்ட் பை-MIUI 10 அமைப்பையே கொண்டுள்ளது. இரண்டு நானோ சிம்கள் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வசதி மூன்று ஸ்மார்ட்போன்களிலும் பொதுவாக உள்ளது. திரையிலும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், 6.3 இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரையை கொண்டுள்ளது. மேலும், இதன் திரைகளின் திரை விகிதம் 19.5:9.
ரெட்மீ நோட் 7 Pro-வில் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற இரு ஸ்மார்ட்போன்களான ரெட்மீ நோட் 7S மற்றும் ரெட்மீ நோட் 7 ஆகிய இரு போன்களிலும், குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
ரெட்மீ நோட் 7S ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 13 மெகாபிக்சல் அளவிலான ஒரு முன்புற கேமராவை கொண்டுள்ளது. 'ரெட்மீ நோட் 7 Pro'-விலும் இதே கேமரா அமைப்பு தான், 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் அளவிலான இரண்டு பின்புற கேமராக்கள் மற்றும் 13 மெகாபிக்சல் அளவிலான ஒரு முன்புற கேமரா. ரெட்மீ நோட் 7-ல் 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்கள் மற்றும் 13 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது.
அளவிலும் எடையிலும் ஒரே மாதிரியாக உள்ள இந்த மூன்று போன்கள், 159.21x75.21x8.10mm என்ற அளவையும், 185 கிராம் என்ற எடையையும் கொண்டுள்ளது. இந்த மூன்று போன்களிலும் 4G, வை-பை மற்றும் ப்ளூடூத் v5 வசதிகள் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch