6.3 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் 48 மெகா பிக்சல் கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 10 லட்சம் என்ற விற்பனை அளவைத் தாண்டியுள்ளது
இந்தியாவில் 'ரெட்மீ நோட்7'னின் அறிமுக தேதி இன்னும் வெளியாகவில்லை!
சுமார் 1 மில்லியன் 'ரெட்மீ நோட் 7' ஸ்மார்ட்போன்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ரெட்மீ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லூ வெய்பிங், வெய்போவில் தெரிவித்துள்ளார்.
சியோமி நிறுவனத்துடன் இணைந்து ரெட்மீ பைய் சியோமி என்ற கூட்டணியில் வெளியிடப்பட்ட முதல் தயாரிப்பாக இருக்கும் 'ரெட்மீ நோட் 7' ஸ்மார்ட்போன், கடந்த மாதம் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த வாரமே விற்பனைக்கு வெளியாகிய இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. அங்கு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்திய வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
விற்பனைக்கு வெளியாகி மூன்று வாரங்களே ஆகியுள்ள நிலையில் சியோமி ரெட்மீயின் இந்த புதிய தயாரிப்பு விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
6.3 இஞ்ச் ஹெச்டி திரை, குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மற்றும் 4,000 mAh பேட்டரி பவர் என்ற பல சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியானது.
விலைப் பட்டியலை பொறுத்தவரை இந்த ரெட்மீ நோட் 7 மூன்று வகைகளாக வெளியாகின. அதன்படி 3ஜிபி ரேம்/ 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூபாய் 10,300க்கும், 4ஜிபி ரேம்/ 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மற்றோரு வகை ரூபாய் 12,400க்கும் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதே தயாரிப்பில் 6ஜிபி ரேம்/ 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு ரூபாய் 14,500க்கு வெளியானது. அதேபோல் 6ஜிபி ரேம்/ 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகையும் மற்ற மாடல்கள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சியோமியின் இந்தியாவுக்கான நிர்வாகத் தலைவர் மனு குமார் ஜெயின், 'ரெட்மீ நோட் 7 இந்தியாவிலும் வெளியாகும். அதன் வெளியீட்டுத் தேதியை குறிப்பிட முடியாது' எனத் தகவல் கொடுத்துள்ளார். மேலும் அவர் 'கேட்ஜெட்ஸ் 360'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ரெட்மீ நோட் 7 இந்தியாவில் வெளியாகும்போது அது பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.
48 மெகா பிக்சல் கேமரா மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சியோமி மற்றும் ரெட்மீ தயாரிப்பு போன்களிலேயே அதிக எதிர்பார்பைப் பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications