சியோமி நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சீனாவில் மட்டுமே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சீனாவில் மட்டுமே வெளியாகும் என்றும் இது ஒரு வகையான 'தயாரிப்பு யுக்தி' என சியோமியின் தென் கிழக்கு ஆசிய இயக்குனரான ஜான் ஷேன் கூறினார்.
இந்த தயாரிப்புடன் வெளியான ரெட்மி நோட் 7 தயாரிப்பு இந்தியா, சீனா மட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. ' ரெட்மி போனை வெளியிட முடியாமல் போனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் ரெட்மி நோட் 7 தயாரிப்புக்கும் ரெட்மி நோட் 7 ப்ரோ தயாரிப்புக்கும் பெரிய வித்தியாசமில்லை. ரெட்மி நோட் 7 தயாரிப்பு 48 மெகா பிக்சல் கேமராவை கொண்டுள்ளது. நாங்கள் மீண்டும் இதுபோன்ற தயாரிப்புகளை கொண்டு வருவோம் என அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்
ரெட்மி நோட் 7 ப்ரோ அறிமுக விலை (இந்தியா):
சியோமி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ரெட்மி நோட் 7 ப்ரோ, ஸ்மோர்ட் போனுக்கு ஆரம்ப விலையாக ரூ.13,999 நிர்ணயம் செய்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த மாடல் போனுக்கு ரூ.13,999 எனில், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரெட்மி நோட் 7 ப்ரோ போன்களை வாங்குபவர்களுக்கு 1,120 ஜிபி (4ஜி) டேட்டாவை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலவசமாக இந்த போனுடன் அல்ட்ரா ஸ்லிம் கேஸ் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:
ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம்பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி அமைப்புகளையும் ரெட்மி ஸ்மார்ட்போன் பொற்றுள்ளது.
மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13 மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன.
மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், கியூவிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC