இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது!
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது!
கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் இந்திய மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தியா மற்றும் சீனாவில் மட்டுமே ரெட்மி நோ 7 ப்ரோ வெளியாகும் என சியோமி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது இந்தியாவில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட்மி நோட் 7 உலகம் முழுவதும் வெளியாகயுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அறிமுக சலுகைகள்:
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்+64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் 6ஜிபி ரேம்+128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.16,999க்கு விற்கப்படுகிறது. நேப்டியுன் ப்ளூ, நேபுலா ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
ரெட்மி நோட் 7 தயாரிப்பின் 3ஜிபி ரேம்+32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.9,999க்கு துவங்குகிறது. அடுத்தபடியாக இருக்கும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மாடல் ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. சியோமியின் இந்த தயாரிப்புகள் ஓன்க்ஸ் ப்ளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் ப்ளூ நிறங்களில் வருகின்றன.
இந்த இரண்டு தயாரிப்புகளும் ஃபிளாப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
ரெட்மி நோட் 7 அமைப்புகள்:
6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி அமைப்புகளையும் ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டுள்ளது.
இதர வசதிகளாக (3ஜிபி/ 4ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 32ஜிபி / 64ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. இந்த போனில் இரண்டு பின்புற கேமரா சென்சார்களை இருக்கும் நிலையில், அதில் ஓன்று 12 மெகா பிக்சலை கொண்ட முதற்நிலை சென்சாரையும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரையும் பெற்றுள்ளன.
கூடுதலாக 4,000mAh பேட்டரி, பின்புற ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டைப் சி போர்ட் மற்றும் குயிக் சார்ஜ் சப்போர்ட் போன்றவற்றை இந்த போன் பெற்றுள்ளது. இந்த போனின் மென்பொருளைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் எம்ஐயுஐ 10-ல் இயங்குகிறது. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஓன்க்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் புளூ நிறங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:
ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம் பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி வசதிகளையும் இந்த போனும் பெற்றுள்ளது.
மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.
செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13 மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், குயிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls