சுமார் 1 மில்லியன் போன்களை இந்தியாவில் மட்டும் விற்பனை செய்து சாதனை!
ஆன்லைன் தளம் மட்டுமின்றி இந்த எம்ஐ தயாரிப்புகள் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
ரெட்மி நோட் 7 வரிசை போன்கள் இந்தியாவில் ஓரே மாதத்தில் சுமார் 1 மில்லியன் யுனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. சியோமி சார்பில் வெளியான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் மட்டுமின்றி இந்த போன்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன. இம்மாத துவக்கத்தில் சியோமி நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 4 மில்லியன் யுனிட் தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தயாரிப்புகள் வெளியாகிய சில வாரங்களிலேயே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சோனி IMX586 48- மெகா பிக்சல் சென்சார் மட்டும் பல முக்கிய அமைப்புகளுடன் இந்தியா மற்றும் சீனாவில் வெளியானது. பட்ஜெட் தயாரிப்புகளான இந்த போன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த போன்கள் மட்டுமின்றி சியோமி சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஐ போண்ட் 3 ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பும் விற்பனையில் சாதனை புரிந்துள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சலுகைகள்:
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்+64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் 6ஜிபி ரேம்+128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.16,999க்கு விற்கப்படுகிறது. நேப்டியுன் ப்ளூ, நேபுலா ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
ரெட்மி நோட் 7 தயாரிப்பின் 3ஜிபி ரேம்+32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.9,999க்கு துவங்குகிறது. அடுத்தபடியாக இருக்கும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மாடல் ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. சியோமியின் இந்த தயாரிப்புகள் ஓன்க்ஸ் ப்ளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் ப்ளூ நிறங்களில் வருகின்றன.
ரெட்மி நோட் 7 அமைப்புகள்:
6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி அமைப்புகளையும் ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டுள்ளது.
இதர வசதிகளாக (3ஜிபி/ 4ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 32ஜிபி / 64ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. இந்த போனில் இரண்டு பின்புற கேமரா சென்சார்களை இருக்கும் நிலையில், அதில் ஓன்று 12 மெகா பிக்சலை கொண்ட முதற்நிலை சென்சாரையும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரையும் பெற்றுள்ளன.
கூடுதலாக 4,000mAh பேட்டரி, பின்புற ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டைப் சி போர்ட் மற்றும் குயிக் சார்ஜ் சப்போர்ட் போன்றவற்றை இந்த போன் பெற்றுள்ளன. இந்த போனின் மென்பொருளைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் எம்ஐயுஐ 10-ல் இயங்குகிறது. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஓன்க்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் புளூ நிறங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:
ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம் பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி வசதிகளையும் இந்த போனும் பெற்றுள்ளது.
மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.
செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13 மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், குயிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nikon Z5IIC Full-Frame Mirrorless Camera Launched in India With 4K Video Recording: Price, Specifications