இந்தியாவில் இன்று விற்பனையை தொடங்கிய ரெட்மி நோட் 7!

ரூ.9,999 முதல் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 7!

இந்தியாவில் இன்று விற்பனையை தொடங்கிய ரெட்மி நோட் 7!

ஜெச்டி திரை மற்றும் வாட்டர் டிராப் திரையை கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • ரூ.9,999 முதல் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 7!
  • 12 மணி முதல் துவங்கிய விற்பனை சேல்!
  • ஓன்க்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் புளூ நிறங்களில் விற்பனை!
விளம்பரம்

ரெட்மி நோட் 7 இந்தியாவில் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனையை தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஃபிளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ கடைகளில் ரெட்மி நோட் 7 தயாரிப்பு வெளியாகியுள்ளது.  ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ஹெச்டி திரைகொண்ட இந்த தயாரிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 7 விலை மற்றும் அறிமுக விலை:

இந்தியாவில் ரெட்மி நோட் 7 (3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி) ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி  வகை இந்தியாவில் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுக சேலாக ஏர்டெல் நிறுவனம் இந்த போன் வாடிக்கையாளர்களுக்கு 1,120 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற இலவச கால்களை தந்துள்ளனர்.மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் டாபுள் டேட்டா அஃபரில் ரூ.198க்கு புதிய திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

 

ரெட்மி நோட் 7 அமைப்புகள்:

6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி அமைப்புகளையும் ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டுள்ளது.

இதர வசதிகளாக (3ஜிபி/ 4ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 32ஜிபி / 64ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. இந்த போனில் இரண்டு பின்புற கேமரா சென்சார்களை இருக்கும் நிலையில், அதில் ஓன்று 12 மெகா பிக்சலை கொண்ட முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.

கூடுதலாக 4,000mAh பேட்டரி, பின்புற ஃபின்கர் பிரிண்ட் சென்சார், டைப் சி போர்ட் மற்றும் குயிக் சார்ஜ் சப்போர்ட் போன்றவற்றை இந்த போன் பெற்றுள்ளது. இந்த போனின் மென்பொருளைப் பொறுத்தவரை ஆண்டிராய்டு 9 பைய் மற்றும் எம்ஐயுஐ 10-ல் இயங்குகிறது. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஓன்க்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சபையர் புளூ நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. லேசர் பிரிண்டர் சந்தை சரிந்து இங்க் டேங்க் பிரிண்டராக மாறும்: எப்சன் சிவக்குமார்
  2. சாம்சோனைட் வேபாயிண்ட் லக்கேஜ் டிராக்கர் சூட்கேஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  3. சிப் டவுன்கிரேடு மற்றும் இரண்டு பின்புற கேமராக்களுடன் ஐபோன் ஏர் 2 வரக்கூடும் என டிப்ஸ்டர் தகவல்
  4. இந்தியாவில் ஜூலை-செப்டம்பரில் புதிய நடுத்தர ரக 4ஜி போன்கள் அறிமுகமாக வாய்ப்பு; பல மாடல்கள் எதிர்பார்ப்பு
  5. யார் இந்த குணால் ஷா? வில் கேத்கார்ட் விலகியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக கிரெட் நிறுவனர் நியமனம்
  6. மெட்டா அதிரடி: வாட்ஸ்அப் உலகளாவிய தலைவராக கிரெட் நிறுவன குணால் ஷா நியமனம்; வில் கேத்கார்ட் விலகுகிறார்
  7. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  8. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  9. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  10. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »