சியோமி தயாரிப்பில் வெளியான ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தனது முதல் ஆண்ட்ராய்டு பைய் கொண்ட MIUI 10 9.3.25 குளோபல் பீடா ரோம் அப்டேட்டை கடந்த வாரம் பெற்றது.
இந்நிலையில் தற்போது அடுத்தபடியாக ஒரு அப்டேட்டை சியோமி இந்த போனிற்கு வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் போனின் லாக் ஸ்கீரினில் இருந்த சில முக்கிய கோளாறுகள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும் இதில் மார்ச் ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி அப்டேட்டும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல அம்சங்களுடன் வெளியாகின்ற இந்த அப்டேட் ரெட்மி நோட் 5 ப்ரோ போனில் பீட்டா வர்ஷனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்துகின்றது. இந்த அப்டேட்டை ரிகவரி ரோம் அல்லது ஃபாஸ்ட்பூட் ரோம் வழிகள் மூலம் பெறலாம்.
இந்த ஆண்ட்ராய்ட் MIUI 10 9.3.25 குளோபல் பீடா ரோம் அப்டேட் போனின் டிஸ்பிளே ஆப்ஷன்களை மாற்றுகிறது. மேலும் இந்த அப்டேட்டின் மூலம் டார்க்மோட் வசதியும் பெறலாம் என்பது கூடுதல் தகவல்.
ரெட்மி நோட் 5 ப்ரோ விலை:
கடந்த ஜனவரி மாதம் இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.1000 தள்ளுபடி பெற்று ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 4ஜிபி ரேம் கொண்ட மாடல் சுமார் ரூ.2000 தள்ளுபடி பெற்று ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்