Photo Credit: Weibo
சியோமி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனான 'ரெட்மீ K20' சீனாவில் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனுடன் 'ரெட்மீ K20 Pro' ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சீனாவில் பெய்ஜிங் நகரில், அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 11:30 மணியாகும். 'கில்லர் 2.0' என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ஒன்ப்ளஸ் 7 Pro-விற்கு போட்டியாக அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் எனவும் பலர் குறிப்பிடுகின்றனர். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர், கேம் டர்போ 2.0 பொன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என முன்னதாகவே, ரெட்மீ நிறுவனம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருந்தது.
இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, இதனுடன், தனது முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக்' லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தவுள்ளது, ரெட்மீ நிறுவனம்.
ரெட்மீ K20: அறிமுக நிகழ்வு!
சீனாவில் பெய்ஜிங் நகரில், அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 11:30 மணியாகும். இதன் நேரலை சியோமி தளம் மற்றும், ரெட்மீயின் வெய்போ சமூக வலைதளத்தில் உள்ள கணக்கிலும் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த நேரலை மாண்டரின்(சீன மொழி)-யிலேயே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கேட்ஜெட்ஸ் 360-யும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் பற்றி உடனுக்குடன் தகவல்கள் வெளியிடவுள்ளதால், ரெட்மீ K20 பற்றிய தகவல்களை இங்கும் தெரிந்துகொள்ளலாம்.
ரெட்மீ K20: முன்பதிவு மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை!
இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு கடந்த மே 24-ஆம் தேதியே துவங்கிவிட்டது. சீனாவில் 100 யுவான்கள்( 1,000 ரூபாய்) அளித்து இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மூன்று வகைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மேலும் இரண்டு வகைகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை, 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை மை ஸ்மார்ட் ப்ரைஸ் (MySmartPrice) தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம், ஒரு சிவப்பு நிற நெருப்பு பொன்ற அமைப்பிலான தோற்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே மாதிரி அமைப்பில், நீல நிறம் கொண்ட ரெட்மீ K20-யின் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாகவே, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என உறுதியான தகவலை வெளியிட்டிருந்த சியோமி நிறுவனம், எப்போது வெளியாகும் என்ற தகவலை இன்னும் குறிப்பிடவில்லை.
ரெட்மீ K20: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!
48 மெகாபிக்சல் கொண்டு வெளியாகும் ரெட்மீ K20 ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் மற்றும் 4000mAh பேட்டரி கொண்டு வெளியாகும் என சியோமி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இதனுடன் ரெட்மீ K20 Pro ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த இரு ஸ்மார்ட்போன்களும், 6.39 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா பொருத்தப்படிருக்கும் என அறிவித்திருந்த சியோமி நிறுவனம், வைட்-ஆங்கிள் கேமராவும் பொருத்தப்படிருக்கும் என அறிவித்திருந்தது. ஒருவேளை இந்த ஸ்மார்ட்போன், மூன்று பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரெட்மீ K20 Pro அறிமுகமானால் அதன் முன்புற கேமரா, பாப்-அப் கேமராவாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜர் இதனுடன் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்