ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள் 21,999 ரூபாய் மற்றும் 27,999 ரூபாய் என்ற விலைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
பாப்-அப் செல்பி கேமராக்களை கொண்டுள்ளது இந்த ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள்
ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் ஜூலை 17 அன்று அறிமுகமானது. புது டெல்லியில், ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள், இந்திய சந்தையில் தனது முதல் விற்பனையை ஜூலை 22 அன்று சந்திக்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள், ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் விற்பனையாகவுள்ளது. கேமரா, பேட்டரி என அனைத்து அம்சங்களிலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒன்று போலவே அமைந்துள்ளது. ப்ராசஸர் மற்றும் சார்ஜரில் மட்டுமே சற்று வேறுபாடுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களில் ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர்,18W சார்ஜர் கொண்டுள்ளது. ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர், 27W சார்ஜரையும் கொண்டுள்ளது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: விலை!
6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது.
இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மஎன இரு வகைகளில் 21,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 22 மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் இந்த விற்பனை நடைபெறவுள்ளது.
சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன்களுடன் 999 ரூபாய் மதிப்புள்ள பிரீமியம் ஹார்டு கவர்களை இலவசமாக வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()
ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
![]()
ரெட்மீ K20: சிறப்பம்சங்கள்!
ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் பொலவே, இந்த ரெட்மீ K20 ஸ்மார்ட்போனும் இரண்டு நானோ சிம்களுடன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 18W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project