855 ரூபாய் அளித்து இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு செய்துகொள்ளலாம்.
'ஆல்பா சேல்' மூலம் முன்பதிவிற்கு வருகிறது ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனம், முன்னதாக சீனாவில் ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. சீனாவில் பெரிய வரவேற்பை பெற்ற அந்த ஸ்மார்ட்போன்கள், எப்போது இந்திய சந்தையில் அறிமுகமாகும் என பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் அறிவித்திருந்தார். நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூலை 17-ல் இந்திய சந்தைகளை பார்க்கவுள்ளன. நேற்று இந்த ஸ்மார்ட்போன், தன் தளத்தில்தான் விற்பனைக்கு வரவுள்ளது என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு எப்போது என்பதை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: முன்பதிவு எப்போது?
முன்பு கூறியதுபோல, இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் புது டெல்லியில் ஜூலை 17 அன்று, ஒரு நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்யவுள்ளது சியோமி நிறுவனம். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் விற்பனையாகப்போகிறது என்ற தகவலும் முன்னதாகவே உறுதியாகியிருந்தது. இன்னிலையில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு தேதியை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, Mi மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 12-ல் துவங்கவுள்ளது. 'ஆல்பா சேல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த முன்பதிவு ஜூலை 12 அன்று மதியம் 12 மணிக்கு துவங்கும். 855 ரூபாய் அளித்து இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: எதிர்பார்க்கப்படும் விலை!
நான்கு வகைகளில் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.
இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்) மற்றும் 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்)
சீனாவில், ரெட்மீ K20 Pro நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது. அதே நேரம், ரெட்மீ K20 நீலம் (Glacier Blue) மற்றும் சிவப்பு (Flame Red) என இரு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S25 Gets New Galaxy AI Features From Galaxy S26 With New One UI 8.5 Update
Ubisoft Shuts Down 2 More Studios, Lays Off Up to 380 Employees in Latest Round of Cost Cuts