இந்த ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும், இன்னும் ஆறு வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என ரெட்மீ இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் கூறியுள்ளார்.
பாப்-அப் செல்பி கேமராவுடன் வெளியான ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro
தற்போது, இது அதிகாரப்பூர்வமாகியுள்ளது. சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள், தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகிறது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார், ரெட்மீ இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன். தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பற்றி கூறியுள்ள மனு ஜெய்ன், இந்த ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும், இன்னும் ஆறு வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கை, ஜூலை மாதத்தின் நடுவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மே 28-ஆம் தேதி, பெய்ஜிங்கில் நடந்த அறிமுக நிகழ்வில், ரெட்மீ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்களுடன் 'ரெட்மீபுக் 14' லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தியது ரெட்மீ நிறுவனம்.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: எதிர்பார்க்கப்படும் விலை
நான்கு வகைகளில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.
இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) மற்றும் 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்).
ரெட்மீ K20 Pro நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது. அதே நேரம், ரெட்மீ K20 நீலம் (Glacier Blue) மற்றும் சிவப்பு (Flame Red) என இரு வண்ணங்களில் வெளியாகிறது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது. மற்றபடி ரெட்மீ K20-யும் ரெட்மீ K20 Pro-வும் ஒன்று தான்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Starts Warning Users About Chats From Unknown Numbers
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Camera Upgrades Said to Result in Thicker Rear Camera Module, Larger Lenses
Grand Theft Auto 6 Price, Editions Revealed; Pre-Orders Begin at Midnight on June 25