இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ரெட்மி கோ இன்று முதல்முறையாக விற்பனைக்கு வெளியாகின்றது. ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் இன்று வெளியாகும் இந்த ஸ்மார்ட் போன் பிரபல சீன நிறுவனமான சியோமியின் தயாரிப்பாகும்.
இந்த 'ரெட்மி கோ' ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ மென்பொருள் கொண்டு இயங்குகிறது. அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டு இந்த போன் இயங்குவதால் எல்லாருக்கும் ஒரு ஸ்மார்ட்போன் என்ற அடிப்படையில் இந்த போன் 4,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
ரெட்மி கோ இந்திய விலை மற்றும் அறிமுக சலுகைகள்:
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட மாடல் இந்தியாவில் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் விற்பனைக்கு வெளியாகிறது.
அறிமுக விற்பனையைத் தொடர்ந்து ரூ.2,200 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டாவை ஜியோ நிறுவனம் இந்த போனுக்குத் தருகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் சார்பில் இந்த போனுக்கு கட்டணமில்லா தவனைத்திட்ட வசதி, ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர்க்கு கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி போன்ற வசதிகள் கிடைக்கின்றன.
ரெட்மி கோ அமைப்புகள்:
இரண்டு சிம்-கார்டு வசதிகள் கொண்டுள்ள இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டு இயங்குகறிது. மேலும் 5 இஞ்ச் ஹெச்டி திரை, குவாட்-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேமை இந்த போன் கொண்டுள்ளது.
பின்புறத்தில் 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் மாட்யூலை கொண்டுள்ளது. ஹெடிஆர் அமைப்புகள், ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் போன்ற பல ஸ்மார்ட் அமைப்புகளை இந்த போன் கொண்டுள்ளது.
இந்த போனில் 8ஜிபி சேமிப்பு வசதி மட்டுமே உள்ள நிலையில் சியோமி நிறுவனம் சார்பில் 128 ஜிபி வரையுள்ள எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இடம் பெற்றுள்ளது. 137 கிராம் மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மைக்ரோபோன்கள் போனில் இருக்கும் வீண் சத்தங்களை குறைக்கும் என சியோமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்