சீனாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது CNY 799 (இந்திய மதிப்பில் சுமார் 8,500 ரூபாய்) என்று அறிவிக்கப்பட்டது
ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஷாவ்மி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ரெட்மி 9 ப்ரைம் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஷாவ்மி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும். கடந்தாண்டு ரெட்மி 8 சீரிஸ் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ரெட்மி 9 சீரிஸ்க்கான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றன.
இதுவரையில் ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ஆகிய ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. ஆனால் குறைந்த விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மட்டும் அறிமுகம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், ரெட்மி 9க்குப் பதிலாக ரெட்மி 9 ப்ரைம் என்ற பெயரில் ஷாவ்மி நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ரெட்மியின் டுவிட்டர் பக்கத்திலும், mi.com இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. அதை வைத்துப் பார்க்கும் போது, அண்மையில் சீனாவில் வெளியான ரெட்மி 9 ஸ்மார்ட்போனையே பெயர் மாற்றம் செய்து ரெட்மி 9 ப்ரைம் என்ற பெயரில் அறிமுகமாகிறதா என்ற கேள்வி எழுகிறது.
எம்ஐ தரப்பில் வெளியான விளம்பரங்களை வைத்துப் பார்க்கும் போது ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ப்ரைம் டைம் பேட்டரி, ப்ரைம் டைம் கேமரா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. எனவே, அதிக மெகா பிக்சல் கொண்ட கேமரா, அதிக சக்தி கொண்ட பேட்டரி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது CNY 799 (இந்திய மதிப்பில் சுமார் 8,500 ரூபாய்) என்று அறிவிக்கப்பட்டது. அதே போல், தற்போது இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் உண்மையான விலை, சிறப்பு சலுகைகள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Hubble Data Reveals Previously Invisible ‘Gas Spur’ Spilling From Galaxy NGC 4388’s Core
Dhurandhar Reportedly Set for OTT Release: What You Need to Know About Aditya Dhar’s Spy Thriller
Follow My Voice Now Available on Prime Video: What You Need to Know About Ariana Godoy’s Novel Adaptation
Rare ‘Double’ Lightning Phenomena With Massive Red Rings Light Up the Alps