மீண்டும் விற்பனைக்கு வந்தது Redmi 8A Dual...! 

மீண்டும் விற்பனைக்கு வந்தது Redmi 8A Dual...! 

Redmi 8A Dual பின்புற கேமரா அமைப்புடன், Redmi 8A-க்கு மேம்படுத்தலாக வருகிறது

ஹைலைட்ஸ்
  • Redmi 8A Dual, Amazon, Mi.com மூலம் கிடைக்கிறது
  • இந்த போன், இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • Redmi 8A Dual இரண்டு தனித்துவமான ரேம் ஆப்ஷன்களுடன் வருகிறது
விளம்பரம்

சீன பிராண்டின் சமீபத்திய ரெட்மி-சீரிஸ் ஸ்மார்ட்போனான Redmi 8A Dual இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட கால திறந்த விற்பனையின் கீழ் வாங்குவதற்கு கிடைக்கிறது. பிப்ரவரி 25 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை திறந்த விற்பனை நேரலையில் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட Redmi 8A Dual, Redmi 8A-க்கு மேம்படுத்தலாக வருகிறது.


இந்தியாவில் Redmi 8A Dual விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Redmi 8A Dual-ன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.6,499-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.6,999 விலைக் குறியீட்டுடன் வருகிறது. இரண்டு ஆப்ஷன்களும் Midnight Grey, Sea Blue மற்றும் Sky White கலர் ஷேட்களில் கிடைக்கின்றன. மேலும், ரெட்மி இந்தியா ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபடி, திறந்த விற்பனை Amazon மற்றும் Mi.com மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

Redmi 8A Dual-ன் விற்பனை சலுகைகளில் அமேசான் மூலம் ரூ.6,600 எக்ஸ்சேஞ் தள்ளுபடி, Mi.com மூலம் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு EMI ஆப்ஷன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சதவீத உடனடி தள்ளுபடி ஆகியவை அடங்கும். அமேசானில் no-cost EMI ஆப்ஷனும் உள்ளது.


Redmi 8A Dual விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Redmi 8A Dual, MIUI உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.22 இன்ச் எச்டி + (720x1520 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, இது டாட் நாட்ச் வடிவமைப்பு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டுள்ளது. டிஸ்பிளே பேனலில் 19:9 விகிதமும் உள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது, இத்துடன் 3 ஜிபி ரேம் உள்ளது. Redmi 8A Dualன் இரட்டை பின்புற கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை depth சென்சார் ஆகியவை அடங்கும்.

செல்ஃபிக்களுக்காக, Redmi 8A Dual முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது, இது AI Selfie Portrait மற்றும் AI Face unlock அம்சங்களை ஆதரிக்கிறது.

Redmi 8A Dual, 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது, இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, இந்த ஸ்மார்ட்போன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்-ஐ ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேட்டரியைக் கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »