இந்தியாவில் Redmi 13 5G அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது Redmi பிராண்டின் பட்ஜெட் 5G போனாக வெளியாகி இருக்கிறது.
Photo Credit: Redmi
Snapdragon 4 Gen 2 AE சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது பிராண்டின் பட்ஜெட் 5G போனாக வெளியாகி இருக்கிறது. Redmi 12 5G மொபைலின் வெற்றியைத் தொடர்ந்து இந்த மாடல் வெளியாகி உள்ளது. Redmi 13 5G செல்போன் 108MP கேமரா, 120Hz டிஸ்ப்ளே, 5030mAh பேட்டரியை கொண்டுள்ளது.
இந்தியாவில் Redmi 13 5G 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் 13,999 ரூபாய்
8ஜிபி + 128ஜிபி 15,499 ரூபாய்
இது இறுதி விலையா என்பது குறித்து நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஹவாய் ப்ளூ, பிளாக் டயமண்ட் மற்றும் ஆர்க்கிட் பிங்க் வண்ணங்களில் கிடைக்கிறது. Amazon, Redmi நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. 1,000 ரூபாய் வரை வங்கி தள்ளுபடி கிடைக்கும்.
Redmi 13 5G டூயல் சிம் வசதியுடன் ஆண்ட்ராய்டு 14, சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் மூலம் இயங்குகிறது. 6.79-இன்ச் முழு-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வந்துள்ளது. குவால்கம் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 Gen 2 AE SoC சிப் மூலம் இயக்கப்படுகிறது. 8GB வரை ரேம் வசதி உள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு Samsung ISOCELL HM6 சென்சார் மற்றும் f/1.75 வசதியுடன் கூடிய 108 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முதன்மை கேமராவில் 3x இன்-சென்சார் ஜூம் இருக்கிறது. வீடியோ காலிங் மற்றும் செல்ஃபிக்களுக்கு முன்பக்கம் 13-மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
Redmi 13 5G செல்போனில் 128GB உள்ளடங்கிய ஸ்டோரேஜ் உள்ளது. SD கார்டு வழியாக இன்டெர்னல் ஸ்டோரேஜ் 1 TB வரை அதிகரிக்கலாம். 5G, 4G LTE, டூயல் பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய வசதிகள் உள்ளது. USB Type-C போர்ட் மூலம் 5,030mAh பேட்டரியை 33W திறனில் சார்ஜ் செய்யலாம்.
Redmi 13 5G அகச்சிவப்பு (IR) கதிர் டிரான்ஸ்மிட்டரையும் கொண்டுள்ளது. இது பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. செல்போன் மொத்தமாக 205g எடையுடையது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features