சியோமிக்கு போட்டியாக ரியல்மீ, முதல் 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன் Realme XT அறிமுகமானது!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 28 ஆகஸ்ட் 2019 17:15 IST
ஹைலைட்ஸ்
  • Realme XT ஸ்மார்ட்போன் 128GB வரையிலான சேமிப்பை கொண்டுள்ளது
  • 4 பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த Realme XT
  • Realme XT ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும்

Realme XT ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Credit: Weibo/ ITHeat

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னர், Realme XT ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை ரியல்மீ நிறுவனம் வெளியிட்டுள்ளது. Realme XT ஸ்மார்ட்போன், ஓப்போவிலிருந்து பிரிந்த வந்த இந்த நிறுவனத்தின் 64 மெகாபிக்சல் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட ஊடங்களை மட்டும் அழைத்து சீனாவில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திய ரியல்மீ நிறுவனம், Realme XT ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெய்போ தளங்களிலும் வெளியாகியுள்ளது. இன்னும் Realme XT ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல்கள் அறிவிக்கப்படவில்லை, Realme 5 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வில், ரியல்மீ இந்தியாவில் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் வெளியிட்ட டீசரை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme XT சிறப்பம்சங்கள் 

Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. 4GB + 64GB, 6GB + 64GB, மற்றும் 8GB + 128GB என்று மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. கூடவே, 4,000mAh பேட்டரி,  20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Realme XT கேமரா வசதிகள்

கேமராக்களை பொருத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களின் வண்ணத்தை பொருத்தவரை நீலம் (Pearl Blue) என்ற ஒரே நிறம்தான் தற்போதைக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை (Silver Wing White) என்ற மற்றொரு வண்ணத்தில் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை (Android 9 Pie) மையப்படுத்தி ColorOS 6 அமைப்பை கொண்டு இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த எந்த தகவலையும் ரியல்மீ நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், அடுத்த மாதத்தில் சீனாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme XT, Realme XT specifications, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  2. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  3. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  4. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
  5. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  6. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  8. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  9. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  10. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.