Realme X2 Pro-வின் புதிய அப்டேட் Breeno voice assistant-ஐயும் கொண்டுவருகிறது.
Realme X2 Pro, Android 9 Pie-அடிப்படையிலான ColorOS 6.1 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது
Realme X2 Pro, Android 10-ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI-ஐ பெறத் தொடங்கியுள்ளது. புதிய அப்டேட் பீட்டா சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே கிடைக்கிறது. இது சீனாவில் உள்ள Realme X2 Pro பயனர்களுக்கு மட்டுமே வெளிவருகிறது. சீன ரியல்மி மன்றங்களில் உள்ள பயனர்களின் பட்டியலால் இந்த அப்டேடின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. Oppo-வின் ColorOS 7-ஆல் ஆதரிக்கப்படும் சமீபத்திய அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பின், சில பயனர்கள் சிக்கல்களைக் குறிப்பிட்டுள்ளனர். Realme X2-வில் Realme UI-ஐ சோதிக்க, பீட்டா சோதனையாளர்களை ரியல்மி அழைக்கத் தொடங்கியுள்ளது.
சீன ரியல்மி மன்றங்களில் பயனர் அறிக்கையின்படி, Realme X2 Pro, ஃபார்ம்வேர் பதிப்பு RMX1931_11_C.14 உடன் Realme UI பீட்டாவைப் பெறத் தொடங்கியது. புதிய அப்டேட் Breeno voice assistant-ஐயும் கொண்டுவருகிறது.
சமீபத்திய மென்பொருள் பதிப்பு 708MB அளவு மற்றும் சீனாவில் இருக்கும் பயனர்களுக்கு மட்டுமே. ஆயினும்கூட, இது எதிர்காலத்தில் உலகளாவிய பீட்டா சோதனையாளர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
சீனாவில் Realme X2 Pro பயனர்கள் Realme UI பீட்டா அப்டேட்டை பெற்றுள்ளனர்
Photo Credit: Realmebbs.com
பல பயனர்கள் தங்கள் Realme X2 Pro-வில் Realme UI பீட்டா அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பின் கடுமையான சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர். இருப்பினும், Realme அதன் அடுத்த பீட்டா வெளியீட்டில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வாய்ப்புள்ளது.
Realme X2 Pro இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் ColorOS 7-ஐப் பெறும் என்று, ரியல்மி கடந்த நவம்பரில் அறிவித்தது. இப்போது ரியல்மி, Realme UI உடன் சமீபத்திய ColorOS பதிப்பை கொண்டுவருகிறது.
இந்தியாவில் Android 10 அடிப்படையிலான Realme UI சோதனை செய்யும் திட்டத்தையும் ரியல்மி சமீபத்தில் அறிவித்தது. சீன நிறுவனம் நாட்டில் பீட்டா சோதனையாளர்களை அழைக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் ஜனவரி 20 முதல் Realme X2-க்கான Realme UI பீட்டா சோதனைக்கான விண்ணப்பங்களை எடுக்கத் தொடங்கும். மேலும், பீட்டா சோதனை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும்.
நினைவுகூர, Realme X2 Pro அக்டோபர் மாதம் சீனாவில் ColorOS 6.10-ஐ அடிப்படையாகக் கொண்ட Android 9 Pie மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது OnePlus 7T மற்றும் Redmi K20 Pro-வுக்கு போட்டியாளராக நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமானது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999