6GB RAM, 64GB ஸ்டோரேஜ் வேரியண்டில் Realme X2 Pro! எப்போ ரிலீஸ்?

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 23 டிசம்பர் 2019 12:49 IST
ஹைலைட்ஸ்
  • Realme X2 Pro-வின் 6GB + 64GB வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகமா
  • சந்தையில் கிடைப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை
  • Realme X2 Pro, Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது

Realme X2 Pro ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை அனுமதிக்காது. எனவே, சில பயனர்களுக்கு 64GB போதுமானதாக இருக்காது.

ரியல்மி, கடந்த மாதம் இந்தியாவில் Realme X2 Pro-வை அறிமுகப்படுத்தியது. ஒப்போ ஸ்பின்-ஆஃப் முதலில், போனின் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் 8 ஜிபி ரேமை பேக் செய்யும். ஆனால் இப்போது, ​​நிறுவனம் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் கூடிய Realme X2 Pro-வின் புதிய வேரியண்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. 

Realme மொபைல்களின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். நிறுவனம் விரைவில் 6 ஜிபி + 64 ஜிபி போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது நாட்டில் வருங்கால Realme X2 Pro வாங்குபவர்களுக்கு மிகவும் மலிவு விலையை வழங்குகிறது. இந்தியாவில், Realme X2 Pro-வின் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 27,999 ஆகும். ஆனால், அவை சந்தையில் கிடைப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

ஒப்பிடுகையில், Realme X2 Proவின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 29,999-யாகவும், அதன் டாப்-எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 33.999-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, ரியல்மியின் முதல் முதன்மை போன் Lunar White மற்றும் Neptune Blue-வில் வருகிறது. Concrete மற்றும் Red Brick ஆகிய இரண்டு வண்ணங்களில் வரும் Realme X2 Pro Master Edition-ஐயும் நிறுவனம் வழங்குகிறது.
 

Realme X2 Pro-வின் விவரக்குறிப்புகள்:

Realme X2 Pro,  20:9 aspect ratio, 90Hz refresh rate உடன்  6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 12GB RAM உடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855+ octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. Realme X2 Pro-வில் 50W SuperVOOC Flash சார்ஜ் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது.

Realme X2 Pro-வில் f/1.8 lens உடன் 64-megapixel Samsung ISOCELL Bright GW1 முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் உள்ளது. f/2.5 telephoto lens உடன் 13-megapixel இரண்டாம் நிலை சென்சார், f/2.2 aperture உடன் 115-degree ultra-wide-angle லென்ஸோடு 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் f/2.0 lens உடன் 16-megapixel Sony IMX471 கேமரா சென்சார் உள்ளது. 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality and design
  • Stereo speakers sound good
  • Smooth app, gaming performance
  • Good battery life, super-fast charging
  • Vivid 90Hz display
  • Bad
  • Heats up under load
  • Low-light video quality isn’t great
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.