ரியல்மி தரப்பில் இன்று புத்தம் புதிய ரியல்மி V5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
Photo Credit: Weibo/ Realme
6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் என இரண்டு வேரியண்டுகளில் ரியல்மி V5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம்.
தற்போது வெளியாகவுள்ள ரியல்மி ஸ்மாரட்போன் V சீரிஸ் போன் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. இதன் முதற்கட்டமாக இரண்டு மாடல்கள் மட்டும் இன்று அறிமுகமாகின்றன. அவை, RMX2111 மற்றும் RMX2112 ஆகும். இவை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். இருப்பினும், TENAA சான்றிதழ் இணையதளத்தில் ரியல்மி V5 ஸ்மார்ட்போன் குறித்து சில விவரங்கள் கசிந்துள்ளன.
ரியல்மி V5 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
TENAA தரப்பில் வெளிவந்த தகவலின்படி, ரியல்மி V5 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ரியல்மி யுஐ வழங்கப்படுகிறது. 6.5 இன்ச் அளவிலனா ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியா டெக் டைமென்சிட்டி 800 அல்லது டைமென்சிட்டி 720 SoC பிராசசர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
RMX2111 மற்றும் RMX2112 இரண்டு மாடல் நம்பர்களில் ரியல்மி V5 எதிர்பார்க்கப்படுகிறது
Photo Credit: TENAA
6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் என இரண்டு வேரியன்டுகளில் ரியல்மி V5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம். அதற்கு ஏற்றவாறு 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி ஸ்டோரெஜ் வழங்கப்படலாம். RMX2111 மாடல் 64 ஜிபி மெமரி வேரியன்டிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதவிர, ரியல்மி V5 ஸ்மார்ட்போனில் 256 எக்ஸ்பேண்டபிள் மெமரி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கேமராவைப் பொறுத்தவரையில் RMX2111 மற்றும் RMX2112 இரண்டு மாடல்களிலும் குவாட் கேமரா (4 கேமராக்கள்) இருக்கலாம். 48MP பிரைமரி கேமரா, 8MP செகண்டரி கேமரா, 2MP கொண்ட இரண்டு கேமராக்கள் இருக்கலாம். இதே போல் முன்புறத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TENAA தகவலின்படி, ரியல்மி V5 ஸ்மார்ட்போனில் 4,900mAh சக்தி கொண்ட பேட்டரியும் 5G NSA/SA, 4G LTE, ப்ளூடூத், USB, இன்னும் பல வசதிகளும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Pad Ultra Set to Launch on September 29; Design, Key Specifications Revealed