ஆண்டுராய்டு 9 பைய் மென்பொருளின் அப்டேட்கள் 2019 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது!
ஆண்டுராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் Realme U1, இந்தியாவில் ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியான ரியல்மி U1 ஸ்மார்ட்போன் சீன நிறுவனமான ஓப்போ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. ரூ.9,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ஸ்டையில் நாட்ச், ஆண்டுராய்டு 8.1 ஓரியோ மென்பொருளை கொண்டுள்ளது.
மேலும் இந்த ரியல்மி U1 ஸ்மார்ட்போன் 2018 ஆம் ஆண்டு மீடியாடெக் ஹூலியோ SoC, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆண்டுராய்டு 9 பைய் அப்டேட்டுக்காக இந்த போனை பயன்படுத்துவோர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ரியல்மி நிறுவனம் சார்பில் OTA மென்பொருள் அப்டேட் வெளியாகியுள்ளது.
போனின் மென்பொருள் பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த மார்ச் ஆண்டுராய்டு ஆப்டேட் வெளியாகியுள்ளதாக நிறுவனம் சார்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பல வாடிக்கையாளர்களை நேரடியாக இந்த அப்டேட் சென்றடையாத நிலையில் நம்மால் நேரடியாக இந்த அப்டேட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இந்நிலையில் ரியல்மி இந்தியாவின் நிர்வாக இயக்குனரான மாதவ் சேத் இந்த அப்டேட் குறித்து கூறியது 'ரியல்மி 1, ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி U1 தயாரிப்புகளுக்கு இந்த புதிய 'நையிட் ஸ்கேப்' மோட் மற்றும் ஆண்டுராய்டு 9 பைய் அப்டேட்டை விரைவில் வழங்கவுள்ளோம். இந்த அப்டேட்கள் 2019 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வெளியாகும் என' அவர் கூறினார்.
இந்த 'நையிட் ஸ்கேப்' மோட் கூகுள் பிக்சல் போனில் வெளியான நையிட் சையிட் வசதியைபோல் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கும் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது என்பது கூடுதல் தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S27 Ultra Tipped to Launch With a Custom Snapdragon 8 Elite Series Chip