ரியல்மி U1 (3ஜிபி ரேம் / 64ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல்முறையாக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த முதல் சேல் அமேசான் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் நடக்கவிருக்கிறது. ரியல்மி நிறுவனம் சார்பில் இந்த போனை ரியல்மி நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரியல்மி பட்ஸ் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த வாரம் ரியல்மி நிறுவனம் தனது தயாரிப்பான ரியல்மி U1 போனின் (3ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 4ஜிபி/64ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட இரண்டு மாடல் போன்களுக்கும் ரூ.1000 தள்ளுபடியை வழங்கியது. மேலும் இந்த புதிய போனின் விற்பனை ரியல்மி வழங்கும் 'ரியல்மி யோ டேஸ் சேல்' உடன் வெளியாகியுள்ளதால் அமேசான் தளத்தில் முன்னரே பணத்தை செலுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரியல்மி U1 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அறிமுக ஆஃபர்கள்:
இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வெளியாகும் ரியல்மி U1 (3ஜிபி ரேம் / 64ஜிபி சேமிப்பு வசதி) கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல இந்த போனில் வேரு இரண்டு ரேம் மற்றும் சேமிப்பு வசதிகொண்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான நிலையில் 3ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.9,999க்கும், 4ஜிபி/64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மதியம் 12 மணி முதல் அமேசான் தளத்தில் இந்த சேல் துவங்குகிறது. ரியல்மி தளத்தில் இந்த சேல் 11 மணிக்கு துவங்குகிறது. மேலும் இந்த தயாரிப்பு அம்பிடியஸ் பிளாக் மற்றும் பிரேவ் புளூ போன்ற நிறங்களில் வெளியாகிறது.
ரியல்மி U1 போன்களின் முக்கிய அமைப்புகள்:
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படும். அத்துடன் 6.3 ஃபுல் ஹெச்டி தன்மைகொண்ட எல்.இ.டி டிஸ்ப்ளே இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹூலியோ P70 SoC வசதியை கொண்டுள்ளது.
பின்புறத்தில் 13 எம்பி மற்றும் 2 எம்பி என இரட்டை கேமராவை கொண்டுள்ளது. முன்புறம் 25 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கூடுதலாக 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். அத்துடன் 3,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி திறனும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்