ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஃப்ரோஸ்டட் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சாண்டி பர்பிள் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது
Photo Credit: Xiaomi
இந்தியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ரியல்மி நிறுவனம், இப்போ தன்னோட புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆன Realme P3 Lite 5G அறிமுகப்படுத்தியிருக்கு. இளைஞர்களைக் கவரும் வகையிலும், பட்ஜெட் விலையிலும் சக்திவாய்ந்த அம்சங்களை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் ஒரு அருமையான தேர்வா இருக்கும். இந்த புது போனின் முதல் விற்பனை வரும் செப்டம்பர் 22, 2025 அன்று பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் ஆஃப்லைன் கடைகள்ல தொடங்குது. Realme P3 Lite 5G ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டுகள்ல கிடைக்குது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.10,499 விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.11,499 விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு. இது ஒரு அறிமுக சலுகை விலை.
ஆரம்ப விலை ரூ.12,999-ல இருந்து, வங்கி தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் ரூ.1,000 குறைச்சு இந்த விலையில கிடைக்கும்.
சக்திவாய்ந்த பெர்ஃபார்மன்ஸ்: ரியல்மி P3 லைட் 5ஜி, சக்திவாய்ந்த மீடியாடெக் டைமென்சிட்டி 6300 ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயங்குது. இது ஒரு 6nm சிப்செட் என்பதால், போனின் பெர்ஃபார்மன்ஸ் வேகமாவும், பேட்டரி லைஃப் ரொம்பவும் சிறப்பாவும் இருக்கும். இந்த போன் அன்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி UI 6.0 இயங்குதளத்தில் இயங்குது. அதனால, புதுமையான அம்சங்களையும், ஒரு பிரீமியம் அனுபவத்தையும் கொடுக்குது. கூடுதலாக, இதில் 6ஜிபி வரை ரேம் இருக்கும். அதை கூடுதலாக விர்ச்சுவல் ரேம் மூலம் 18 ஜிபி வரை நீட்டிக்க முடியும். அதனால, மல்டி-டாஸ்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது.
நீடித்த பேட்டரி மற்றும் கேமரா: இந்த போனின் முக்கியமான ஹைலைட்டே, அதோட 6,000mAh மெகா பேட்டரிதான். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். இது மட்டுமில்லாம, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு. அதனால, பேட்டரி சீக்கிரமா ஃபுல் ஆகிடும். வெறும் 37 நிமிஷத்துல 0%ல இருந்து 50% வரை சார்ஜ் பண்ண முடியும்னு நிறுவனம் சொல்லியிருக்கு. கேமராவைப் பொறுத்தவரை, போனின் பின்புறம் 32 மெகாபிக்சல் மெயின் கேமரா இருக்கு. இது சிறப்பான படங்களை எடுக்க உதவும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கு.
ரியல்மி P3 லைட் 5ஜி, 6.67 இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிப்பதால், ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவம் ரொம்பவும் ஸ்மூத்தா இருக்கும். இந்த போனுக்கு IP64 மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கு. இது தூசி மற்றும் நீர் தெறிப்பிலிருந்து போனை பாதுகாக்கும். மேலும், மிலிட்டரி-கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழும் இந்த போனுக்கு கிடைச்சிருக்கு. அதனால, போன் கீழ விழுந்தாலும் சேதமடையாமல் பாதுகாக்கும். இதில், Rainwater Smart Touchங்கிற ஒரு வசதியும் இருக்கு.
இதனால, ஸ்கிரீன்ல தண்ணி பட்டுருக்கும்போது கூட போனை பயன்படுத்த முடியும். பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் சிம் வசதி, மற்றும் 2TB வரை மைக்ரோSD கார்டு மூலம் ஸ்டோரேஜை விரிவுபடுத்தும் வசதி போன்ற பல அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்