Realme Narzo 70 Curve செல்போனில் மறைந்துள்ள அம்சங்கள் என்னென்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 நவம்பர் 2024 20:23 IST
ஹைலைட்ஸ்
  • Realme Narzo 70 Curve இரண்டு ஆப்ஷன்களில் வெளியாக இருக்கிறது
  • ஏற்கனவே இந்த வரிசையின் கீழ் நான்கு மாடல்கள் உள்ளன
  • இது RMX3990 என்ற மாடல் எண்ணைக் கொண்டிருக்கும்

Realme Narzo 70 ஆனது MediaTek Dimensity 7050 5G SoC இன் கீழ் உள்ளது

Photo Credit: Realme

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Realme Narzo 70 Curve செல்போன் பற்றி தான்.

Realme Narzo 70 Curve விரைவில் வளைந்த திரையுடன் அதிகாரப்பூர்வமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும் , வரவிருக்கும் Narzo 70 செல்போன் தொடரின் ரேம் மற்றும் மெமரி விவரங்கள், வண்ண விருப்பங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. Realme Narzo 70 Curve நான்கு வகையான ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் வருகிறது. இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே Realme நிறுவனத்தின் Narzo 70 சீரிஸ் செல்போன்கள் நான்கு வகைகளை கொண்டுள்ளது. இந்த மாடல்கள் அனைத்தும் MediaTek Dimensity சிப்செட்களில் இயங்குகின்றன.

Realme Narzo 70 Curve செல்போன் 512GB வரை மெமரி கொண்டது
91மொபைல்ஸ் வெளியிட்ட தகவல்படி Realme Narzo 70 Curve செல்போனின் RAM, மெமரி ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இது இந்தியாவில் நான்கு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆபிஷன்களில் கிடைக்கும். அவை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகும்.

Realme Narzo 70 Curve ஆனது டீப் ஊதா மற்றும் டீப் டைட்டானியம் வண்ண விருப்பங்களில் வெளியிடப்படலாம். இது RMX3990 என்ற மாடல் எண்ணைக் கொண்டிருக்கும்.

புதிய நார்சோ சீரிஸ் போனின் இருப்பை Realme இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இது அடுத்த மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக வரும் என்று ஊகிக்கப்படுகிறது . இதன் விலை ரூ. 15,000 மற்றும் ரூ. 20,000 இடையே இருக்கும். Realme Narzo 70 சீரியஸ் மாடல்களான Realme Narzo 70, Narzo 70 Pro, Narzo 70x மற்றும் Narzo 70 Turbo 5G ஆகியவற்றில் இருப்பதை போலவே வடிவமைப்பு, ஆப்ஷன்கள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme Narzo 70 ஆனது MediaTek Dimensity 7050 5G SoC சிப்செட் கொண்டுள்ளது. Narzo 70x ஆனது MediaTek Dimensity 6100+ SoC மூலம் இயங்குகிறது. Realme Narzo 70 Pro 5G ஆனது MediaTek Dimensity 7050 SoC மூலமும், Narzo 70 Turbo 5G ஆனது Dimensity 7300 எனர்ஜி 5G SoC மூலமும் இயங்குகிறது. நான்கு மாடல்களிலும் 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா மற்றும் 5,000mAh பேட்டரிகள் உள்ளன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy போன்ல புது Spyware தாக்குதல்! WhatsApp மூலமா வந்த ஆபத்து நீங்க செக் பண்ணீங்களா?
  2. Vivo-ன் அடுத்த பவர்ஃபுல் மாடல்! 7000mAh பேட்டரி 1.5K AMOLED Display! விலை என்ன தெரியுமா?
  3. Apple மாதிரி Action Key-ஆ? Lava Agni 4-ன் மிரட்டல் லீக்ஸ்! ₹30,000-க்கு கம்மி விலையில் இந்தியன் கிங்
  4. Airtel-ல ரீசார்ஜ் விலை ஏறுது! வெறும் வாய்ஸ் மட்டும் வேணுமா? இனி எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சுக்கோங்க!
  5. Samsung Galaxy S26, S26+ : Raised Camera Island உடன் வடிவமைப்பு மாற்றம் லீக்
  6. OnePlus Open: OxygenOS 16 அப்டேட் வெளியீடு! AI மற்றும் Performance அப்கிரேடுகள்
  7. ரேஸ் பிரியர்களுக்கான போன்! Aston Martin-உடன் கைகோர்த்து Realme வெளியிட்ட Limited Edition போன்
  8. இனி நெட்வொர்க் இல்லனாலும் போனை யூஸ் பண்ணலாம்! Apple-ன் அடுத்த பாய்ச்சல்! புதிய Satellite அம்சங்கள்
  9. Samsung ரசிகர்களுக்கு ஒரு ஹாட் நியூஸ்! Galaxy S26 சீரிஸ் திட்டமிட்டபடி வருது! ஆனா விலையும் ஏறுது
  10. Oppo-வின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போன்! Find X9 சீரிஸ்-ஓட கலர் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.