Photo Credit: Twitter / @realmemobiles
Realme Narzo 10, Realme Narzo 10A உடன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்த போன் Flipkart மற்றும் Realme India site-ல் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட் ரியல்மே நர்சோ 10-ன் விலை ரூ.11,999 ஆகும்.
The most Powerful Quad Camera smartphone in its segment, #realmeNarzo10 comes with MediaTek Helio G80 Processor, 5000mAh Battery & 18W Quick Charge. #48MPQuadCameraEpicPerformance
— realme (@realmemobiles) May 18, 2020
Sale starts today at 12PM on https://t.co/HrgDJTHBFX & @Flipkart.https://t.co/43yc2U1qaH pic.twitter.com/KTOKCJieHS
டூயல்-சிம் ரியல்மி நர்சோ 10, ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். இந்த போனில் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ ஜி 80 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
ரியல்மி நர்சோ 10 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் உருவப்படம் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. இந்த போனில் செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது. போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. ரியல்மே நர்சோ 10 எடை 199 கிராம் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்