ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனானது, இன்று முதல் ஃப்ளிப்கார்ட் மூலம் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நார்சோ 10 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். எனினும், வாடிக்கையாளர்கள் இந்த போனில் மூன்று வண்ண விருப்பங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 SoC பிராசசர், ஆண்ட்ராய்டு 10ல் இயங்குகிறது. இதன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, நார்சோ 10 ஸ்மார்ட்போன் 4ஜிபி + 128ஜிபி வேரியண்டில் மட்டுமே கிடைக்கும், இதன் விலை ரூ.11,999 ஆகும். மூன்று வண்ண விருப்பங்களுடன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
தள்ளுபடியைப் பொறுத்தவரை, ரியல்மி தளத்தில் நார்சோ 10 ஸ்மார்ட்போனை வாங்கும்போது மொபிக்விக் பயனர்களுக்கு 100 சதவீதம் சூப்பர் கேஷ் (ரூ.500 மதிப்பிலான) வரை தள்ளுபடி வழங்குகிறது.
அதேபோல், குறிப்பிட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பொறுத்து ஃப்ளிப்கார்ட்டில் பல சலுகைகள் உள்ளன. இவற்றில் ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டுடன் ஐந்து சதவீத தள்ளுபடி கிடைக்கிறது, ரூபே டெபிட் கார்டு மூலம் ரூ.7,500க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ.75 வரை தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது. மூன்று மாதங்கள் முதல் ஒன்பது மாதங்கள் வரையிலான கட்டணமில்லாத EMI திட்டங்களையும் ஃப்ளிப்கார்ட் வழங்குகிறது.
ரியல்மி நர்சோ 10 ஸ்மார்ட்போனானது, 6.5இன்ச் எச்டி + மினி-டிராப் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 720x1,600 பிக்சல்கள் கொண்டுள்ளது. மீடியாடெக் G80 SoC பிராசசரும். 4ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேமையும் கொண்டுள்ளது.
இரட்டை சிம் கொண்ட இந்த போனில் 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, அதுபோக, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 256ஜிபி வரை விரிவாக்கமும் செய்துகொள்ள முடியும். நார்சோ 10 புளூடூத் 5.0ஐ சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 10ல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 18W பார்ஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 5,000 mAh பேட்டரி மூலம் இயங்குகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, ரியல்மி நார்சோ 10 போனில், செல்ஃபிக்களுக்காக 16 மெகாபிக்சல் கேமரா முன்பக்கம் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது ஒரு குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன.
Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்