Realme நர்சோ சீரிஸ் திங்கள்கிழமை (இன்று) இந்தியாவுக்கு வருகிறது. ரியல்மி நர்சோ 10 மற்றும் நர்சோ 10 ஏ ஆகியவை இன்று பிற்பகல் அறிமுகம் செய்யப்படும். மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், ஊரடங்கு காரணமாக சீன நிறுவனம் இந்த வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த போன் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்வதாகவும் நிறுவனம் கூறியது ஆனால், அதுவும் ரத்து செய்யப்பட்டது. புதிய போன்கள் மே 11-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்புகளும் இந்த வாரம் ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன.
Realme Narzo 10 மற்றும் Realme Narzo 10A வெளியீட்டு நிகழ்வு மே 11 அன்று மதியம் 12:30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேனலில் பல்வேறு சமூக ஊடக சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியை நிறுவனத்தின் YouTube சேனலில் நேரடியாகக் காணலாம்.
ரியல்மி நர்சோ 10 இந்தியாவில் ரூ.15,000-க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும். நர்சோ 10 ஏ சந்தையில் சுமார் ரூ.10,000-க்கு வரலாம்.
ரியல்மி நர்சோ 10 மற்றும் நர்சோ 10 ஏ, 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும். Realme 6i சமீபத்தில் மியான்மரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்பைப் பயன்படுத்துகிறது. போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. ரியல்மி அந்த போனின் பெயருக்கு பதிலாக நர்சோ 10-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். Realme C3 தாய்லாந்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில், இந்த போனின் பெயரை நர்சோ 10 ஏ என மாற்றலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்