ரியல்மி போன்களுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த 'ஹோலி சேல்' தற்போது வெளியாகியுள்ளது.
ரூ.9,999 முதல் ரியல்மி U1 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.
ரியல்மி U1 மற்றும் ரியல்மி 2 ப்ரோ போன் வருகின்ற ரியல்மி ஹோலி சேலில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹோலி சேல் வரும் நாளை தொடங்கி - மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஹோலி சேலில் ரியல்மி போன்களின் தள்ளுபடியுடன், ஓப்போ ஸ்பின்ஆஃப் மூலம் ரியோல்மி பேக்குகள் ரூ.1க்கு முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும் நடக்கவுள்ள இந்த சேலின் மூலம் ரூ.10,999-க்கு ரியல்மி U1 போனும் ரூ.11,990 முதல் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று இரவு 8 மணிமுதல் ரியல் 3 ரூ.8,999-க்கு இந்தியாவில் விற்பனையை துவங்கும் நிலையில் இந்த சேலின் மூலம் ரியல்மியின் மற்ற போன்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. இன்று வெளியாகும் ரியல்மி 3 போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி மாடல் போன் ரூ.8,999க்கும், 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்த ரியல்மி 3 போனுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடியாக ஹெச்டிஎஃப்சி வங்கியும் மற்றும் ரூ.5,300 மதிப்புள்ள ஜியோ சலுகைகளும் பெற முடிகிறது. இதுமட்டுமில்லாமல் மொபிவிக் நிறுவனம் சார்பாக ரியோல்மி போன்களுக்கு கூடுதல் கேஷ்பேக் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Blood of Dawnwalker Will Get a 60 FPS Performance Mode Patch on Consoles at Launch