Realme GT 7 ஆறு மணி நேரம் நிலையான 120FPS BGMI கேம்ப்ளேவை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.
Photo Credit: Realme
Realme GT 7, மே 27 அன்று மற்ற உலகளாவிய சந்தைகளுடன் இணைந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Realme GT 7-ல MediaTek Dimensity 9400e சிப்செட் இருக்கு, இது TSMC-யோட 4nm டெக்னாலஜி-ல உருவாக்கப்பட்டது. இதுல 1 Cortex-X4 ப்ரைம் கோர் (3.4GHz), 3 Cortex-X4 கோர்ஸ் (2.85GHz), 4 Cortex-A720 கோர்ஸ் (2.0GHz) இருக்கு. 12-கோர் Immortalis-G720 GPU, ஹார்டுவேர் ரே ட்ரேசிங் சப்போர்ட் பண்ணுது. AnTuTu ஸ்கோர் 2.45 மில்லியனுக்கு மேல! இது ஆன்ட்ராய்டு ஃபோன்ஸ்-ல டாப் 3 ப்ரோசஸர்கள்ல ஒன்னு. PUBG, Mobile Legends மாதிரி கேம்ஸ் 120fps-ல 6 மணி நேரம் ஸ்மூத்-ஆ ரன் ஆகும்னு Realme சொல்லுது. GT Boost டெக்னாலஜி, ஃப்ரேம்-பை-ஃப்ரேம் பவர் மேனேஜ்மென்ட் பண்ணி, கேமிங்க நம்மள மயக்குது
இந்த ஃபோன்ல 7,000mAh பேட்டரி, 10% சிலிகான் அனோடு டெக்னாலஜி இருக்கு. 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 15 நிமிஷத்துல 1%ல இருந்து 50% சார்ஜ் ஆகுது. 7.5W ரிவர்ஸ் சார்ஜிங், ஸ்மார்ட் பேட்டரி மேனேஜ்மென்ட் சிப் – இது 95% ஓவர்ஹீட்டிங் குறைக்குது, பேட்டரி லைஃப் 3 மடங்கு அதிகமாகுது. கேமிங், ஸ்ட்ரீமிங், நாள் முழுக்க டென்ஷன் இல்ல
6.78-இன்ச் Full-HD+ OLED டிஸ்பிளே, 144Hz ரிஃப்ரெஷ் ரேட், 6,000 நிட்ஸ் ப்ரைட்னஸ் (சீன வேரியன்ட் 6,500 நிட்ஸ்) இருக்கு. IceSense Black, IceSense Blue கலர்ஸ், ஃபைபர்கிளாஸ்-கிராஃபீன் கூலிங் கவர் – இது சிப்செட்ட 6°C கூலா வைக்குது. IP68/IP69 ரேட்டிங், டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இருக்கு.
கேமரா பத்தி இன்னும் ஃபுல் டீடெயில்ஸ் இல்ல, ஆனா 50MP மெயின் (Sony IMX896, OIS), 8MP அல்ட்ரா-வைடு, 16MP செல்ஃபி கேமரா இருக்கலாம். 4K 60fps வீடியோ, Wi-Fi 7, Bluetooth 6.0, 5G, Realme UI 6.0 (Android 15) இருக்கு.
மே 27-ல இந்தியாவுல realme.com, Amazon.in-ல லாஞ்ச் ஆகுது. சீனாவுல விலை 30,999 ரூபாய்ல இருந்து ஆரம்பிக்குது, இந்தியாவுல 35,000-40,000 ரூபாய் ரேஞ்சுல இருக்கலாம். Realme GT 7 ஒரு பவர்-பேக்டு ஃபோன், கேமிங், மல்டி டாஸ்கிங்குக்கு செம்ம சாய்ஸ். Dimensity 9400e, 7,000mAh பேட்டரி, 120W சார்ஜிங் – இது ஃபிளாக்ஷிப் ஃபோன்ஸுக்கு சவால் விடுது.
Realme GT 7 ஸ்மார்ட்போன் IceSense Black மற்றும் IceSense Blue நிறங்களில் கிடைக்கிறது. வெப்ப மேலாண்மைக்காக IceSense Graphene தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யுது. Realme GT 7T மாறுபாடு கருப்பு, நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களில் கிடைக்கிறது. பேட்டரி-மையப்படுத்தப்பட்ட சிப் 95 சதவிகிதம் வரை குறைவான அளவில் சூடாகுமாம். மூன்று மடங்கு பேட்டரி ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்றாங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.