ரியல்மீ 3 ஸ்மார்ட்போனை புதிய டைமண்ட் ரெட் நிற வண்ணத்தில் ரியல்மீ வெளியிட்டுள்ளது.
ரியல்மீ 3 Pro ஸ்மார்ட்போன் 1,000 ரூபாய் தள்ளுபடி பெற்றுள்ளது
ரியல்மீ இந்தியா நிறுவனம் 'ரியல்மே ஃப்ரீடம் சேல்' குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 3 வரை நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் நடைபெறும் இந்த விற்பனையில் ரியல்மீ 3 Pro, ரியல்மீ 2 Pro மற்றும் ரியல்மீ C1 ஆகிய ஸ்மார்ட்போன்கள் சலுகைகளை பெற்றுள்ளது. 9 மில்லியன் பயனர்களை பெற்றதை கொண்டாடும் வகையில் ரியல்மீ நிறுவனம் இந்த விற்பனையை அறிவித்துள்ளது. மேலும் இந்த ரியல்மீ ஃப்ரீடம் சேலில், ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் புதிய டைமண்ட் ரெட் நிற வண்ணத்தில் ரியல்மீ வெளியிட்டுள்ளது.
இந்த விற்பனையில் முதலாவதாக ரியல்மீ 3 Pro ஸ்மார்ட்போன் 1,000 ரூபாய் தள்ளுபடி பெற்று விற்பனையாகவுள்ளது. அதன்படி 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ 3 Pro ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதேபோல, 6GB + 64GB மற்றும் 6GB + 128GB வகைகள் 14,999 ரூபாய் மற்றும் 15,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது. சாம்பல் (Carbon Grey), நீலம் (Nitro Blue), மற்றும் ஊதா (Lightning Purple) என மூன்று வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.
இதேபோல, மற்றொரு ஸ்மார்ட்போனான ரியல்மீ 2 Pro தன் விலையிலிருந்து 500 ரூபாய் சலுகையை பெற்றுள்ளது. அதன்படி 4GB RAM + 64GB சேமிப்பு ரியல்மீ 2 Pro ஸ்மார்ட்போன், 10,490 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
7,499 ரூபாய் என்ற விலையில் விற்பனையில் உள்ள ரியல்மீ C1 ஸ்மார்ட்போன், 500 ரூபாய் தள்ளுபடியை பெற்று 6,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது.
ரியல்மீ நிறுவனம், 'டைமண்ட் ரெட்' நிற வண்ணத்தில் ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் ஆக்ஸ்ட் 1 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.
3GB + 32GB, 3GB + 64GB, மற்றும் 4GB + 64GB என மூன்று வகைகள் கொண்ட இந்த ரியல்மீ 3 ஸ்மார்ட்போன், 8,999 ரூபாய், 9,999 ரூபாய், மற்றும் 10,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது. 6.2 இன்ச் HD+ திரை, ஹீலியோ P70 எஸ்.ஓ.சி ப்ராசஸர், இரண்டு பின்புற கேமராக்கள், 13 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 4,230mAh பேட்டரி என்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999