யு.எஸ் எஃப்.சி.சி தளத்தில் பதிவேற்றப்பட்ட திட்டப்படி, Realme C3s பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டிருக்கின்றன.
Photo Credit: FCC
Realme C3s சமீபத்தில் தாய்லாந்தின் என்.பி.டி.சியில் சான்றிதழ் பெற்றதாகக் கூறப்படுகிறது. இப்போது அதே மாதிரி எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போன் அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனில் (எஃப்.சி.சி) வெவ்வேறு விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. FCC-யில் காணப்பட்ட Realme C3s RMX2020 என்ற மாதிரி எண்ணைக் கொண்டுள்ளது. இந்த பட்டியல் போனின் வடிவமைப்பு, மென்பொருள் மற்றும் பிற விவரங்களையும் வெளிப்படுத்துகிறது. எஃப்.சி.சி பட்டியலில் ஸ்மார்ட்போனின் ஒரு திட்டமும் உள்ளது. இது வரவிருக்கும் Realme C3s ஒரு கைரேகை ஸ்கேனரை பின்புறத்தில் ஒரு நீளமான கேமரா தொகுதிடன் கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது.
கேமரா தொகுதி பல சென்சாரகளுக்குப் போதுமானதாக இருப்பதால், Realme C3s பல கேமரா அமைப்பில் எஃப்.சி.சி குறிப்புகளில் வெளிவந்தன. Realme C3s எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் depth சென்சார் அல்லது wide-angle லென்ஸுடன் வரக்கூடும். இந்த விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னர் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஸ்மார்ட்போன், பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கும் என்பதையும் இந்த பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. இது கைரேகை ஸ்கேனரை, Realme C2 தவறவிட்டதைக் கருத்தில் கொண்டு ஒரு நல்ல கூடுதலாகும். இந்த Realme C3s ஆண்ட்ராய்டு 10-ன் அடிப்படையில் ColorOS 7-ஐ இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme C3s, Wi-Fi 2.4GHz-ஐ ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பட்டியல் வேறு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
அண்மையில், தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme C2s-ன் தொடராக Realme C3s-ஐ Realme தயார் செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் Realme C2-வின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். எனவே, Realme C3s இந்தியா உட்பட சில சந்தைகளில் Realme C3-யாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் Realme 5i-யை அறிமுகப்படுத்தியது. இது RMX2030 என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. Realme 5i, 20: 9 விகிதத்தைக் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. Realme C3s-ஐப் பொறுத்தவரை, முக்கிய விவரங்கள் வெளிவர நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features