ரியல்மி சி 3-யின் விலை மீண்டும் உயர்வு!

ரியல்மி சி 3-யின் விலை மீண்டும் உயர்வு!

ரியல்மி சி 3 செல்பி கேமராவிற்கு ஒரு நாட்சைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • போனின் விலை ரூ.500 அதிகரித்துள்ளது
  • விலைகள் ரூ.7,999 முதல் தொடங்குகின்றன
  • இந்த போன் ரூ.6,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

Realme சி 3 பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ரியல்மி சமீபத்தில் இந்த போனின் விலையை அதிகரித்தது. விலை உயர்வுக்கு பிறகு, இந்த போனின் விலை இந்தியாவில் ரூ.7,999 முதல் கிடைக்கும். இந்த போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா பயன்படுத்தப்படுகிறது. தொலைபேசியின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.


போனின் விலை:

3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Realme C3-யின் விலை ரூ.7,999 ஆகும். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.8,999-யாக உள்ளது. இந்த போன் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் கிடைக்கும். இந்த போனை Flipkart மற்றும் ரியல்மி website ஆகியவற்றிலிருந்து வாங்கலாம்.

போனின் விவரங்கள்:

ரியல்மி சி 3 நிறுவனத்தின் புதிய ரியல்ம் யுஐ உடன் Android 10-ல் இயங்கும். இந்த போனில் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே இருக்கும். டிஸ்ப்ளேக்கு மேலே ஒரு வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ ஜி 70 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.

ரியல்மி சி 3 பின்புறத்தில் இரட்டை கேமரா உள்ளது. இந்த கேமராவில் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 5 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் உள்ளது.

ரியல்மி சி 3 உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் ஒரே சார்ஜில் 43.9 மணிநேர பேச்சு நேரத்தை வழங்குகிறது. இந்த போனின் எடை 195 கிராம் ஆகும். இணைப்பிற்காக, இந்த போனில் 2.4GHz வைஃபை, யூ.எஸ்.பி ஓ.டி.ஜி, மைக்ரோ யு.எஸ்.பி போர்ட், வோல்டிஇ, புளூடூத் 5, ஜி.பி.எஸ் / பீடோ / கலிலியோ / குளோனாஸ் / ஏ-ஜி.பி.எஸ் ஆகியவை உள்ளது.

The recent COVID-19 pandemic has led to a price hike of components and supply shortage since the beginning of 2020. Further, the Indian Rupee rate has been continuously fluctuating. Many smartphone brands have already increased the price of smartphones in 2019 and 2020 but realme hasn't increased the price of our smartphones since H2 2018. The current price hike is also considering the GST impact and the Rupee rate dropping. The industry has witnessed price hikes in this segment and we also have to adjust our price to sustain our business in a healthy way.
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good performance
  • Excellent battery life
  • Clean UI
  • Bad
  • Preinstalled bloatware
  • Lacks fast charging
Display 6.52-inch
Processor MediaTek Helio G70
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme C3, Realme C3 price in India
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »