2GB RAM + 32GB சேமிப்பு அளவு மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ C2 ஸ்மார்ட்போன்கள் ஜூன் 30 வரை முழு நேர விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.
5,999 ரூபாய் என்ற விலையிலிருந்தே இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்குகிறது
ரியல்மீ C2 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2GB RAM + 16GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ C2 இன்று இரவு 8 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ள நிலையில், 2GB RAM + 32GB சேமிப்பு அளவு மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ C2 ஸ்மார்ட்போன்கள் ஜூன் 30 வரை முழு நேர விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், மே மாதத்தில் முதன்முறையாக விற்பனைக்கு வந்தது. அதன்பின், இந்த ஸ்மார்ட்போனிற்கு பல ஃப்ளாஷ் சேல்களை நடத்தியது ரியல்மீ நிறுவனம். இரண்டு பின்புற கேமரா, மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர், அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ள இந்த ரியல்மீ C2, 8,000 ரூபாய்க்கு குறைந்த விலையில் உள்ள ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மீ C2: விலை!
இந்தியாவில் இந்த ரியல்மீ C2-வின் விலை, 5,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன், 2GB RAM + 16GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இதன் மற்ற இரண்டு வகைகளான 2GB RAM + 32GB சேமிப்பு அளவு மற்றும் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ C2 ஸ்மார்ட்போன்களின் விலை 6,999 ரூபாய் மற்றும் 7,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்கள், நீலம் (Diamond Blue) மற்றும் ப்ளாக் (Diamond Black) என இரு வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ நிறுவனங்களின் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
ரியல்மீ C2: சிறப்பம்சங்கள்!
இந்த ரியல்மீ C2-வில் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், 6.1-இன்ச் HD+ (720x1560 பிக்சல்கள்) திரையை கொண்டுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த கேமராக்கள், 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா.
32GB அளவிலான செமிப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பு அளவை கூட்டிக்கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில், 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v4.2 வசதி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஹெட்போன் ஜேக் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Sony Rolls Out QSSR AI Upscaler for Base PS5 in Marvel's Wolverine and Ghost of Yotei