இன்று விற்பனைக்கு வந்த 'ரியல்மீ C2': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 7 ஜூன் 2019 15:56 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மீ C2 இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளாஷ் சேலில் விற்பனையாகவுள்ளது
  • மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவு 4000mAh

இன்று ஃப்ளாஷ் சேலில் விற்பனையாகவுள்ள ரியல்மீ C2.

இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது, ரியல்மீ நிறுவனத்தின் 'ரியல்மீ C2'. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட், ரியல்மீ தளங்களில் விற்பனையாகவுள்ளது. முன்னதாகவே, கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் பல முறை ஃப்ளாஷ் சேலில் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பின்புற கேமரா, மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர், அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ள இந்த ரியல்மீ C2, 8,000 ரூபாய்க்கு குறைந்த விலையில் உள்ள ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன். 

ரியல்மீ C2: விலை!

இந்தியாவில் இந்த ரியல்மீ C2-வின் விலை, 5,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன், 2GB RAM + 16GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இதன் மற்றொரு வகையான 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகை ரியல்மீ C2-வின் விலை 7,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன்கள், நீலம் (Diamond Blue) மற்றும் ப்ளாக் (Diamond Black) என இரு வண்ணங்களில் விற்பனையாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ நிறுவனங்களின் தளங்களில் இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளாஷ் சேலில் விற்பனையாகவுள்ளது.

ரியல்மீ நிறுவனத்தின் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை மொபிவிக் (Mobiwik) கேஷ் பயன்படுத்தி பெற்றால் 10 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்வுள்ளது.

ரியல்மீ C2: சிறப்பம்சங்கள்!

Advertisement

இந்த ரியல்மீ C2-வில் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன், 6.1-இன்ச் HD+ (720x1560 பிக்சல்கள்) திரையை கொண்டுள்ளது.

இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த கேமராக்கள், 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புற கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா. 

Advertisement

32GB அளவிலான செமிப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 256GB வரை சேமிப்பு அளவை கூட்டிக்கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில், 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v4.2 வசதி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஹெட்போன் ஜேக் பொருத்தப்பட்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful design
  • Up-to-date software
  • Very good battery life
  • Bad
  • Below-average cameras
  • Weak performance
 
KEY SPECS
Display 6.10-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1560 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.