Flipkart Big Billion Days Sale: ரியல்மி போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. முழு விவரம்!

Flipkart Big Billion Days Sale: ரியல்மி போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. முழு விவரம்!

ரியல்மி 2ப்ரோ போனுக்கு ரூ.1,991 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • ரியல்மி C2, ரியல்மி 5, ரியல்மி 3 ப்ரோ உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.1000 வரை த
  • ரியல்மி இணையத்தளத்தில் கூடுதலாக ரூ.500 எக்ஸ்சேஞ் ஆஃபர் பெறலாம்.
  • அமேசான் கிரேட் இந்தியன் சேலில் ரியல்மி யூ1 போனுக்கு ரூ.1000 தள்ளுபடி
விளம்பரம்

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில், ரியல்மி C2, ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி 3, ரியல்மி 3 ப்ரோ, மற்றும் ரியல்மி 5 ப்ரோ உள்ளிட்ட போன்களுக்கு ரூ.1,991 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதில் ரியல்மி C2, ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி 3, ரியல்மி 3 ப்ரோ, மற்றம் ரியல்மி 5 உள்ளிட்ட போன்களுக்கு ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தள்ளுபடி கிடைக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் சேலில் ரியல்மி யூ1 ரூ.1000 தள்ளுபடியில் கிடைக்கிறது. இதுபோக எக்ஸ்சேஞ் ஆஃபர், மற்றும் வங்கி தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளும் அடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் வரும் செப்.30 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ரியல்மி C2, ரியல்மி 5, ரியல்மி 3 ப்ரோ உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதேபோல, ரியல்மி 5 ப்ரோ முன்பதிவு செய்பவர்களுக்கும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. ரியல்மி 2ப்ரோ ரூ.1,991 வரை தள்ளுபடி கிடைக்கிறது. 

ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேலில் ரியல்மி போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியை பெறலாம்.

மேலும், ரியல்மி 3, ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ உள்ளிட்ட மாடல்கள் வட்டியில்லா தவனை முறையிலும் கிடைக்கிறது. இதேபோல், ரூ.299க்கு ஃப்ளிப்கார்ட்டின் முழு மொபைல் பாதுகாப்பும் கிடைக்கிறது. 
 

Realme Phone Model Existing Price (Rs. ) Discounted Price (Rs. ) Discount (Rs. )
Realme C2 (2GB+32GB) 6,999 5,999 1,000
Realme C2 (3GB +32GB) 7,999 6,999 1,000
Realme 2 Pro 10,990 8,999 1,991
Realme 5 (3GB + 32GB) 9,999 8,999 1,000
Realme 5 (4GB + 64GB) 10,999 9,999 1,000
Realme 5 Pro 13,999 12,999 (on prepaid booking) 1,000
Realme 3 Pro 12,999 11,999 1,000
Realme U1 8,999 7,999 1,000


இதேபோல், அமேசான் கிரேட் இந்தியன் சேலில் ரியல்மி யூ1 போனுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதேபோல், எஸ்பிஐ வங்கி கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. 

ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேலில், கடந்த வாரம் சியோமி தனது சலுகை விற்பனையை அறிவித்தது. ரெட்மி k20ப்ரோ, ரெட்மி நோட்7s உள்ளிட்ட போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

இதேபோல், மோட்டோரோலா ஒன் விஷன், சாம்சங் கேலக்ஸி s9+ உள்ளிட்ட போன்களுக்கும் தள்ளபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல போன்களுக்கான சலுகைகள் வரும் நாட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme C2, Realme 2 Pro, Realme 3, Realme 3 Pro, Realme 5, Realme 5 Pro, Realme U1, Realme
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  2. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  3. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  4. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
  5. ரூபாய் 1 லட்சத்துக்கு கீழ் பட்ஜெட்டில் தரமான லேப்டாப் வேண்டுமா
  6. பட்ஜெட் விலையில் கிடைக்கும் Air Conditioners இப்போ விட்டா அவ்வளோ தான்
  7. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு Amazon Great Republic Day Sale 2025 ஆபர்
  8. Amazon Great Republic Day Sale 2025: ஸ்மார்ட் டிவிகளில் அதிரடி விலைகுறைப்பு
  9. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  10. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »