சாம்சங் 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ரியல்மீயின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத்
64 மெகாபிக்சல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்
64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்த ரியல்மீயின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் சேத், இந்த சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகும் ஸ்மார்ட்போன் முதலில் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறியுள்ளார். சமீபத்தில் சீனாவில் தன் தயாரிப்புகளான ரியல்மீ X மற்றும் ரியல்மீ X லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதற்கு பின், ரியல்மீ நிறுவனம் வெளியிடும் அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங்கின் 64 மெகாபிக்சல் மூலம் எடுக்கப்பட்ட ஒரு லேட்ஸ்கேப் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் மாதவ் சேத். அந்த பதிவில் இந்த கேமரா சென்சார் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் இந்தியாவில் முதலில் அறிமுகமாகவுள்ளது என்ற தகவலை உறுதி செய்துள்ளார்.
64 மெகாபிக்சல் அளவிலான இந்த கேமரா சென்சார், ஒளி குறைந்த நேரங்களில் சாம்சங் டெட்ராசெல் தொழில்நுட்பம் மூலம் 16 மெகாபிக்சல் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்கும்.
இதுமட்டுமின்றி, 2019-ல் 5G ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக முன்னதாகவே ரியல்மீ நிறுவனம் அறிவித்திருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z Fold 8 Wide Appears on IMDA Database, New Wide Foldable Phone Could Arrive Soon
Xiaomi 18 Pro Could Launch Before Standard Xiaomi 18 Model, Tipster Claims