ரியல்மீ 64 மெகாபிக்சல் கேமராவின் புகைப்படங்கள், சியோமியுடன் ஒப்பிட்ட மாதவ் சேத்!

ரியல்மீ 64 மெகாபிக்சல் கேமராவின் புகைப்படங்கள், சியோமியுடன் ஒப்பிட்ட மாதவ் சேத்!

64 மெகாபிக்சல் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மீயுடைதாக அமையலாம்

ஹைலைட்ஸ்
  • 64 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகவுள்ள முதல் ஸ்மார்ட்போன் இதுதான்
  • சிறந்த தரத்தை கொண்டுள்ளது, இந்த ரியல்மீயின் 64 மெகாபிக்சல் கேமரா
  • இந்தியாவில் தான் இந்த ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகம்
விளம்பரம்

ரியல்மீ நிறுவனம், தனது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறது. சீனாவின் ரியல்மீ நிறுவனமே, 64 மெகாபிக்சல் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகும் எனக் கூறியுள்ளது. மற்றொரு பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில்தான் முதலில் அறிமுகமாகும் என்ற அறிவிப்பை ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைம நிர்வாக அதிகாரியான மாதவ் சேத் அறிவித்திருந்தார். இன்னிலையில் மாதவ் சேத் மற்றொரு செய்தியையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், இந்த ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அந்த புகைப்படங்களை சியோமியின் ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள அந்த ட்வீட்டில் இரண்டு அதிக தரம் கொண்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தின் விவரங்கள், பெயர் மற்றும் வாட்டர் மார்க் தெரியும்படி இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், தன்னுடைய 64 மெகாபிக்சல் ரியல்மீ ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, வேறு எதோ ஸ்மார்ட்போனுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டுள்ளார். இன்னிலையில், ரியல்மீ ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள வாட்டர் மார்க் தெளிவாக தெரிகிற நேரத்தில், அதனுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள வாட்டர் மார்க் மறைத்தே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த போட்டோ 48 மெகாபிக்சல் கேமராவில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், அரைகுறையாக தெரியும் அந்த வாட்டர் மார்க்கை ஆராய்ந்து பார்த்தால், இந்த புகைப்படம் சியோமியின் ஒரு ஸ்மார்ட்போன் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அந்த ஸ்மார்ட்போன் சியோமியின் Mi 9-ஆக இருக்கலாம்.

இந்த புகைப்படங்களை பற்றி பேசுகையில், ரியல்மீ ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம் சிறப்பாகவே அமைந்துள்ளது. நல்ல தரத்தில் அமைந்துள்ள இதன் புகைப்படங்கள், துள்ளியமான தரவுகளை அளிக்கிறது.

முன்னதாக, வெய்போ தளத்தில், ரியல்மீ நிறுவனம், 64 மெகாபிக்சல் கேமரா கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் கேமராவுடன் சேர்த்து நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்த 64 மெகாபிக்சல் கேமரா, 6912x9216 பிக்சல்கள் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும், 64 மெகாபிக்சல் அளவிலான இந்த கேமரா சென்சார், ஒளி குறைந்த நேரங்களில் சாம்சங் டெட்ராசெல் தொழில்நுட்பம் மூலம் 16 மெகாபிக்சல் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ரியல்மீ நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகமாகும் என குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில்தான் முதலில் அறிமுகமாகும் என ரியல்மீ இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனரான மாதவ் சேத் குறிப்பிட்டிருந்தார். இவற்றை வைத்துப் பார்க்கையில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Xioami, Xiaomi Mi 9
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »