இந்தியாவில் Realme 6 Pro-வின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 6 ப்ரோ இரட்டை ஹோல்-பஞ்ச் செல்பி கேமரா மற்றும் 90Hz டிஸ்பிளேவுடன் வருகிறது
ரியல்மி 6 ப்ரோ இன்று இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. புதிய ரியல்மி போன் அதன் டன் டவுன் மாடலான ரியல்மி 6 உடன் இணைந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன், மதியம் 12 மணிக்கு ஒரு குறிப்பிட்ட கால விற்பனை மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.
இந்தியாவில் Realme 6 Pro-வின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.17,999 மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 விலைக் குறையீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன்கள் Lightning Blue மற்றும் Lightning Orange கலர் ஆப்ஷன்களில் வருகின்றன. மேலும், இது Flipkart, Realme.com மற்றும் விருப்பமான ஆஃப்லைன் சில்லறை கூட்டாளர்கள் மூலம் மதியம் 12 மணிக்கு வாங்குவதற்கு கிடைக்கும்.
ரியல்மி 6 ப்ரோவின் விற்பனை சலுகைகளில் ஆக்சிஸ் வங்கி கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். ரியல்மி.காம் வலைத்தளம் மூலம் போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள 5 சதவீத மொபிக்விக் சூப்பர் கேஷ் மற்றும் காஷிஃபை எக்ஸ்சேஞ்ச் பலன்களைப் பெறலாம்.
டூயல்-சிம் (நானோ) ரியல்மி 6 ப்ரோ, Realme UI உடன் Android 10-ல்இயக்குகிறது மற்றும் 6.6 இன்ச் முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அட்ரினோ 618 ஜி.பீ.யு மற்றும் 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் இரட்டை சேனல் ரேம் ஆகியவற்றுடன் இந்த போன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 720G-ஐ பேக் செய்கிறது.
ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில், f/1.8 லென்ஸுடன் 64 மெகாபிக்சல் சாம்சங் GW1 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் f/2.3 aperture உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், f/2.5 aperture உடன் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை உள்ளன. இது 30fps பிரேம் வீதத்தில் 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது மற்றும் 20x ஹைப்ரிட் ஜூம் கொண்டுள்ளது.
செல்பி மற்றும் வீடியோக்களுக்கு, ரியல்மி 6 ப்ரோ டூயல் ஹோல்-பஞ்ச் செல்பி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது, f/2.0 லென்ஸுடன் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 முதன்மை சென்சார் மற்றும் f/2.2 லென்ஸுடன் உடன் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் ஆகியவற்றை அல்ட்ரா-வைட்- ஆங்கிள் உள்ளது.
ரியல்மி 6 ப்ரோ, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது, அவை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியவை. போனின் இணைப்பு விருப்பங்களில் G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, GPS/ A-GPS, NavIC மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.
30W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,300 எம்ஏஎச் பேட்டரியை ரியல்மி வழங்கியுள்ளது. தவிர, இந்த போன் 163.8x75.8x8.9மிமீ அளவு மற்றும் 202 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999