ரியல்மி 6 புரோ மற்றும் ரியல்மி 6 ஆகியவை சீன நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு புதிய மாடல்களும் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வருகின்றன. ரியல்மி 6 ப்ரோ டூயல் செல்பி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, ரியல்மி 6 ஒற்றை செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. ரியல்ம் 6 ப்ரோ நாட்டின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும், இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக்கிய Navigation with Indian Constellation (NavIC) உடன் வழிசெலுத்தலை ஆதரிக்கிறது.
இந்தியாவில் Realme 6 Pro-வின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.17,999 மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999-யாக விலையிடப்படுள்து. இரண்டு மாடல்களும் Lightning Blue மற்றும் Lightning Orange கலர் ஆப்ஷன்களில் வருகின்றன. மேலும், ரியல்மி 6 ப்ரோ மார்ச் 13-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும். பிளிப்கார்ட், ரியல்மி.காம் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் சில்லறை கடைகள் மூலம் இந்த விற்பனை நடைபெறும்.
இதற்கு மாறாக, இந்தியாவில் Realme 6-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.12,999-யில் இருந்து தொடங்குகிறது. இந்த போன், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999-க்கும் வருகிறது. மேலும், இதுComet Blue மற்றும் Comet White கலர்களில் வருகிறது. ரியல்மி 6, மார்ச் 11-ஆம் தேதி மதியம் 12 மணி விற்பனைக்கு வரும்.
ரியல்மி 6 ப்ரோவின் அறிமுக சலுகைகளில் பிளிப்கார்ட் மூலம் போனை வாங்கும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி அடங்கும்.
டூயல்-சிம் (நானோ) ரியல்மி 6 ப்ரோ, Realme UI உடன் Android 10-ல்இயக்குகிறது மற்றும் 6.6 இன்ச் முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அட்ரினோ 618 ஜி.பீ.யு மற்றும் 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் இரட்டை சேனல் ரேம் ஆகியவற்றுடன் இந்த போன் ஆக்டா கோர் Snapdragon 720G SoC-ஐ பேக் செய்கிறது.
ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில், f/1.8 லென்ஸுடன் 64 மெகாபிக்சல் சாம்சங் GW1 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் f/2.3 aperture உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், f/2.5 aperture உடன் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை உள்ளன. இது 30fps பிரேம் வீதத்தில் 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது மற்றும் 20x ஹைப்ரிட் ஜூம் கொண்டுள்ளது.
செல்பி மற்றும் வீடியோக்களுக்கு, ரியல்மி 6 ப்ரோ டூயல் ஹோல்-பஞ்ச் செல்பி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது, f/2.0 லென்ஸுடன் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 முதன்மை சென்சார் மற்றும் f/2.2 லென்ஸுடன் உடன் 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் ஆகியவற்றை அல்ட்ரா-வைட்- ஆங்கிள் உள்ளது.
ரியல்மி 6 ப்ரோ, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது, அவை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியவை. போனின் இணைப்பு விருப்பங்களில் G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, GPS/ A-GPS, NavIC மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் சூப்பர் லீனியர் ஸ்பீக்கருடன் வருகிறது மற்றும் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் சவுண்ட் தர அம்சங்களை ஆதரிக்கிறது. இது நீர் எதிர்ப்பு வடிவமைப்பிலும் வருகிறது.
30W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,300mAh பேட்டரியை ரியல்மி வழங்கியுள்ளது. தவிர, இந்த போன் 163.8x75.8x8.9மிமீ அளவு மற்றும் 202 கிராம் எடை கொண்டது.
டூயல்-சிம் (நானோ) ரியல்மி 6, ரியல்மி யுஐ உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இந்த போன் 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2400 பிக்சல்கள்) அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது, அதோடு 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் குவாட்-சேனல் ரேம் உள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ரியல்மி 6 ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில், f/1.8 உடன் 64 மெகாபிக்சல் சாம்சங் GW1 முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் f/2.3 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், போரெயிட் ஷாட்ஸ்களுக்கு f/2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் நான்காம் நிலை சென்சார் ஆகியவைப் அடங்கும்.
ரியல்மி 6-ல் f/2.0 லென்ஸுடன் ஒற்றை 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சாரை வழங்கியுள்ளது. இந்த போன் Portrait Mode, Timelapse, Panoramic View, AI Beauty, HDR மற்றும் Bokeh Effect போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.
ரியல்மி 6-ல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உள்ளன, இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியவை. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். போனில் accelerometer, ambient light sensor, magnetometer மற்றும் proximity சென்சார் உள்ளிட்ட சென்சார்கள் உள்ளன. இது 30W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைசியாக, இந்த போன் 162.1x74.8x8.9மிமீ அளவு மற்றும் 191 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்