ரியல்மீ 5 Pro மற்றும் ரியல்மீ 5 ஸ்மார்ட்போன்கள், இந்தியாவின் புது டெல்லியில் இன்று அறிமுகமாகியுள்ளது. ஓப்போவிலிருந்து பிரிந்துவந்த இந்த துணை நிறுவனம், பட்ஜெட் விலையில் 4 பின்புற கேமராக்களுடனான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாகவே, ரியல்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நான்கு கேமராக்களைக் கொண்ட இந்த ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், 10,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்பதை குறிப்பிட்டிருந்தார். இன்றைய நிகழ்வில் ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்களின் விலை, சிறப்பம்சங்கள், விற்பனை மற்றும் சலுகைகள் என அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போன் உலக அளவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலான 4GB RAM/ 64GB சேமிப்பு வெர்சன் 13,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இதுமட்டுமின்றி இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போனில், 6GB RAM/ 64GB சேமிப்பு வகை 14,999 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM/ 128GB சேமிப்பு வகை 16,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பச்சை (Crystal Green) மற்றும் நீலம் (Sparkling Blue) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
மறுபுறம் ரியல்மீ 5 ஸ்மார்ட்போன், 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM/ 32GB சேமிப்பு வகை 9,999 ரூபாயிலும், 4GB RAM/ 64GB சேமிப்பு வகை 10,999 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM/ 128GB சேமிப்பு வகை 11,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Crystal Blue) மற்றும் ஊதா (Crystal Purple) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
மேலும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவலும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. அதன்படி ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் செப்டம்பர் 4 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கு முன்னதாகவே, ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ரியல்மீ மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் Color OS 6.0-யை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.3-இன்ச் full-HD+ (1080x2340 பிக்சல்கள்) திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது.
4 பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 119-டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான போர்ட்ரைட் கேமரா ஆகிய கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான வாட்டர்-ட்ராப் நாட்ச் கேமராவை கொண்டுள்ளது.
ரியல்மீ 5 Pro ஸ்மர்ர்ட்போன் 4G VoLTE, வை-பை 802.11ac, ப்ளூடூத் v5.0, a GPS/ A-GPS, 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் USB டைப்-C சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,035mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும், இதனுடன் VOOC 3.0 அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன் போன்றே இரண்டு நானோ சிம் வசதி கொண்ட Color OS 6.0-யை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் full-HD+ (720x1600 பிக்சல்கள்) திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது.
4 பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 119-டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான போர்ட்ரைட் கேமரா ஆகிய கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் அளவிலான வாட்டர்-ட்ராப் நாட்ச் கேமராவை கொண்டுள்ளது.
ரியல்மீ 5 Pro ஸ்மர்ர்ட்போன் 4G VoLTE, வை-பை 802.11ac, ப்ளூடூத் v5.0, a GPS/ A-GPS, 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் USB டைப்-C சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும், இதனுடன் VOOC 3.0 அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்