பல சலுகைகளுடன், 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
இந்த மாதத்தின் நடுவில் இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் அறிமுகமானது.
சமீபத்திய அறிமுகமான ரியல்மீ நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இன்று விற்பனையாகவுள்ளது. இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ தளங்களில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த ஜூலை 15 அன்று அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 23 அன்று நடைபெற்றது. இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமரா,டியூட்ராப் திரை, மீடியாடெக் ஹீலியோ P60 எஸ் ஓ சி ப்ராஸசர், 4,230mAh பேட்டரி, 13 மெகாபிக்சல் கேமரா என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Diamond Black), நீலம் (Diamond Blue), மற்றும் சிவப்பு (Diamond Red) என மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று (ஜூலை 30) மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் தளங்களில் விற்பனையாகவுள்ளது.
விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, ரியல்மீ ஆன்லைன் தளத்தில் 5,750 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகள், 22 வவுச்சர்கள் மூலம் தலா 100 ரூபாய் என 2,200 ரூபாய் வரை உடனடி கேஷ்பேக், மேக்மைட்ரிப், மைன்ட்ரா, மற்றும் ஜூம்கார் ஆகியவற்றிலிருந்து 4,800 மதிப்புள்ள வவுச்சர்கள், மொபிக்விக் மூலம் 10 சதவீதம் சூப்பர் கேஷ், 1,500 ரூபாய் வரை வழங்கவுள்ளது.
ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு அறிமுகமாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டியூட்ராப் நாட்சுடன் 6.22-இன்ச் திரை, 19:9 திரை விகிதம், 88.30 சதவிகித திரை-உடல் விகிதம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியொ P60 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G, வை-பை, ப்ளூடூத் v4.2, ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule