'ரியல்மீ X'-உடன் இணைகிறது 'ரியல்மீ 3i', ஜூலை 15-ல் அறிமுகம்!

ஃப்ளிப்கார்ட் ரியல்மீ 3i-ஐ 'ஸ்மார்ட்போன்களின் சாம்பியன்' என குறிப்பிட்டுள்ளது.

'ரியல்மீ X'-உடன் இணைகிறது 'ரியல்மீ 3i', ஜூலை 15-ல் அறிமுகம்!

முன்னதாக ரியல்மீ 3 கடந்த மார்ச் மாதம் அறிமுகமானது

ஹைலைட்ஸ்
  • இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரியல்மீயின் நிர்வாக இயக்குனர்
  • இந்த ஸ்மார்ட்போனிற்கென ஒரு பக்கத்தை துவங்கியுள்ளது ஃப்ளிப்கார்ட்
  • இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது
விளம்பரம்

இந்தியாவில் 'ரியல்மீ X' ஸ்மார்ட்போனுடன், 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனும் அறிமுகமாகவுள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான மாதவ் சேத், ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இன்னிலையில் செவ்வாய்கிழமையான இன்று, ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் ரியல்மீ 3i ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ரியல்மீ X-உடன் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், குறைந்த விலை பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாதவ் சேத் வெளியிட்ட ட்வீட், ஜூலை 15-ல் ரியல்மீ 3i ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. அவர் வெளியிட்டுள்ள அந்த டிவீட்டில்,"எங்களுடைய புதிய #DareToLeap தயாரிப்புடன் திங்கட்கிழமை சந்திப்போம். அதுசரி, நாங்கள் எத்தனை புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப்போகிறோம் என ஏதாவது யூகம் உள்ளதா?" என கூறியுள்ளார்.

அந்த ட்வீட்டில் ரியல்மீ 3i-தான் அறிமுகமாகப்போகிறது என அவர் குறிப்பிடாத நிலையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தன் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு பிரத்யேகமாக ஒரு பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த பக்கத்தில், ரியல்மீ 3i-ஐ 'ஸ்மார்ட்போன்களின் சாம்பியன்' என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலிஷ் டிசைன், பெரிய பேட்டரி, நல்ல டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது என அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொழில்நுட்ப வல்லுனர் இஷான் அகர்வால், இது குறித்து கூறுகையில், இந்த 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டின் எக்ஸ்குளூசிவாக இருக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ 3-யை விட குறைந்த விலையில் இருக்கும் என கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு வெளியான ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது.   

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »