இனி ‘ஓப்பன் சேல்’ மூலம் கிடைக்கும் ‘ரியல்மி 3’!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 27 ஏப்ரல் 2019 11:30 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி சி.இ.ஓ மாதவ் சேத், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
  • சென்ற மாதம் ரியல்மி 3 வெளியானது
  • ஃப்ளிப்கார்ட், ரியல்மி தளங்களில் இந்த போன் கிடைக்கும்

இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரியல்மி 3 மாடல் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

ரியல்மி 3 போன் இனி இந்தியாவில் ஒப்பன் சேல் மூலம் கிடைக்கும். சென்ற மாதம் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட ரியல்மி 3 போன், லிமிட்டெட் கால விற்பனையில் மட்டுமே கிடைத்து வந்தது. சில நாட்களுக்கு முன்னர் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட் போன் ரிலீஸ் ஆன நிலையில் இந்த புதிய அறிவிப்பை நிறுவனத்தின் சி.இ.ஓ மாதவ் சேத் கூறியுள்ளார். ரியல்மி 3 ப்ரோ, ரெட்மி நோட் 7 ப்ரோவுக்குப் போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த வாரத்திலிருந்து ரியல்மி 3 ப்ரோ இந்தியாவில் விற்பனையைத் தொடங்கும். 

ரியல்மி 3 போன், ரியல்மி தளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் அனைத்து நேரமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ரியல்மி 3 விலை:

இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரியல்மி 3 மாடல் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே வகையின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

முதலில் கறுப்பு மற்றும் டைனாமிக் பிளாக் நிறங்கள் மட்டுமே வெளிவந்த ரியல்மி 3, மார்ச் 26 முதல் ரேடியன்ட் நீல நிறத்தில் கிடைக்க ஆரம்பித்தது. இந்த ஓப்பன் சேலில், மூன்று வண்ணங்களில் ஆன ரியல்மி 3 போன்களும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரியல்மி 3 அமைப்புகள்:

இரண்டு சிம்கார்டு வசதி, கலர் ஓஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள் என பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் ஹெச்டி திரையையும் பெற்றுள்ளது. 

Advertisement

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.1 ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ SoC வசதியைப் பெற்றுள்ளது. 3 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தனது பிரமாண்டமான இரண்டு பின்புற கேமராக்களுடன் கலக்குகிறது. 

13/2 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ள நிலையில், ஹெச்டிஆர், ஃபேஸ் அன்லாக் போன்ற சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. பேட்டரி வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பவருடன் உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Powerful processor
  • Quick face recognition
  • ColorOS 6.0 looks slick
  • Bad
  • Front and rear get smudged easily
  • Average cameras
  • Videos aren’t stabilised
  • HD resolution display
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P70
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme 3 price in India, Realme 3 specifications, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25-ஐ விடுங்க.. இதோ வந்துருச்சு S26 Ultra! போஸ்டர் லீக் ஆனது! புது டிசைன்ல செம்ம மாஸா இருக்கு
  2. பட்ஜெட் கையை மீறுது! Xiaomi 15 Ultra-வோட லேட்டஸ்ட் அப்டேட்! பேட்டரில கை வச்சிட்டாங்க போலயே?
  3. மலிவு விலையில் ஒரு 'Beast' டேப்லெட்! Xiaomi Pad 8 Global லீக் வந்துருச்சு! சிப்செட் வேற லெவல்
  4. S-Pen ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Tab S12 மற்றும் புது வாட்ச் வருது! ஆப்பிளுக்கு செம்ம டஃப் கொடுக்கப்போறாங்க
  5. ஷாவ்மி ரசிகர்களே குஷியாகுங்க! 43 ஆயிரம் போன் இப்போ வெறும் 26 ஆயிரத்துக்கு கிடைக்குது! இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  6. யாருப்பா அது பட்ஜெட்ல ஐபோன் கேட்டது? iPhone 16e விலையில் ரூ.11,500 வரை டிஸ்கவுண்ட்! Apple Intelligence வசதியுடன் செம டீல்
  7. S25 சீரிஸ் வந்தா என்ன, எங்களுக்கு ராஜா 'S24 Ultra' தான்! பிளிப்கார்ட்ல ரூ.25,000-க்கு மேல விலை குறைஞ்சிருக்கு
  8. பட்ஜெட்ல ஒரு 'Ultra' போன் வேணுமா? Vivo T4 Ultra இப்போ செம சீப்! பிளிப்கார்ட் ஆஃபர்ல அள்ளிட்டு போங்க!
  9. S25-க்கே இன்னும் வழிய காணோம்.. அதுக்குள்ள S26 லீக்ஸ் வந்துடுச்சா? 50MP கேமராவுடன் களமிறங்கும் Samsung
  10. சாம்சங்-கின் அடுத்த அதிரடி! பட்ஜெட் விலையில் 5G போன் வேணுமா? Galaxy F70e-க்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.